இன்றைய ராசி பலன்கள்! உங்களுக்கு இந்த நாள் எப்படி இருக்கும்..!
மாசி மாதம் பதினோராம் தேதி[ பிப்ரவரி 23, 2024] இன்றைக்கான காண ராசி பலன்களை இங்கே காணலாம்.
மேஷம்:
இன்று பொறுமையான, உறுதியான அணுகுமுறை தேவை. பணியிட சூழல் அவ்வளவு சிறப்பாக இருக்காது. உங்கள் துணையுடன் இன்று அனுசரித்து செல்வது நல்ல பலனை கொடுக்கும். பயணத்தின் போது கவனம் தேவை .ஆரோக்கியத்தை மேம்படுத்த தியானம் யோகா மேற்கொள்வது நல்லது.
ரிஷபம்:
இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாள். பணியில் அதிக வாய்ப்புகள் காணப்படும். புதிய வாய்ப்புகளும் உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். நிதியைப் பொறுத்தவரை இன்று திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்:
இன்றைய நாளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். இன்று பணிச்சுமை காணப்படும் .இன்று உங்கள் துணையிடம் பொறுமையாக இருக்க வேண்டும் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கடகம்:
இன்று உங்களுக்கு சாதகமான நாள் அல்ல. பிரார்த்தனைகள் செய்வதன் மூலம் ஆறுதல் பெறலாம். இன்று பணி சுமை அதிகமாக இருக்கும். உங்கள் துணை இடம் பதட்டத்தை வெளிப்படுத்துவதை தவிர்க்கவும். இன்று பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது .ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எண்ணெய் பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது.
சிம்மம்:
இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக அமையாது. பணியிடத்தில் தவறுகள் நேரலாம். மனதை நிலைப்படுத்தி பணியாற்ற வேண்டும். உங்கள் துணையுடன் அமைதியாக இருக்க வேண்டும். இன்று கடன் வாங்க நேரலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் ,குளிர்ந்த நீரை பருக வேண்டாம்.
கன்னி:
இன்று நீங்கள் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம். பணியிடத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்பு உள்ளது, உங்கள் உழைப்பும் பாராட்டை பெறும். உங்கள் துணையுடன் அன்பு அதிகரிக்கும். நிதி நிலைமை சிறப்பாக காணப்படுகிறது. ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.
துலாம்:
இன்று சுறுசுறுப்பான மனநிலையில் காணப்படுவீர்கள். பணியில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் துணையிடம் சுமூகமாக பழகுவீர்கள். நிதி நிலைமை முன்னேற்றகரமாக காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்:
இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்வதன் மூலம் மனதிற்கு ஆறுதல் கிடைக்கும். பணியிடத்தில் மிகுந்த முயற்சி எடுக்க வேண்டாம் .திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். இன்று உங்கள் துணை இடம் குறைந்த நேரத்தை செலவு செய்வீர்கள். வரவும் செலவும் இணைந்தே காணப்படும். இன்று நீங்கள் சரியான நேரத்தில் உணவு உண்ண வேண்டும், அதிகமான நீரை பருக வேண்டும்.
தனுசு:
இன்று சிறிது சோம்பலுடன் காணப்படுவீர்கள். இன்று முழுவதும் பணியில் மூழ்கி இருப்பீர்கள். உங்கள் துணை இடம் மனக்குழப்பம் காரணமாக சுமூகமான உறவு காணப்படாது. பணத்தை கவனமாக கையாள வேண்டும் .ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மகரம்:
இன்று மகிழ்ச்சியான நாள் .கடினமான பணிகளையும் எளிதாக செய்வீர்கள், மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு கிடைக்கும். எதிர்பாராத பண வரவுகள் காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கும்பம்:
இன்று சிறந்த அதிர்ஷ்டம் காணப்படும். உங்க சக பணியாளர்கள் மற்றும் மேல் அதிகாரிகளுடன் வெளியிடங்களுக்குச் சென்று விருந்தில் கலந்து கொள்வீர்கள். இன்று உங்கள் துணையிடம் காதல் உணர்வை வெளிப்படுத்துவீர்கள். இன்று பண வரவிற்கான வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மீனம்:
உங்கள் சொந்த முயற்சி மூலம் நீங்கள் அபாரமான வளர்ச்சி காண்பீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். உங்கள் துணையுடன் நல் உறவை கொண்டிருப்பீர்கள். நிதி நிலைமையில் முன்னேற்றம் காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.