இன்றைய ராசி பலன்கள்.! 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கும்?
மாசி மாதம் பத்தாம் தேதிக்கான ராசி பலன்கள் [பிப்ரவரி 22, 2024] இன்றைய ராசி பலன்களை இங்கே காணலாம்.
மேஷம்:
இன்று நீங்கள் பொறுமையுடனும் உறுதியுடனும் இருக்க வேண்டும். பணியிடத்தில் உங்கள் கீழ் பணிபுரிவர்களிடம் மோதல் காணப்படும். உங்கள் துணையுடன் ஈகோவை வெளிப்படுத்துவதை தவிர்க்கவும் .இன்று செலவுகள் அதிகமாக காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று ஆன்மீகத்தில் ஈடுபடுவது நல்ல பலன்களை தரும்.
ரிஷபம்:
இன்று நம்பிக்கையான போக்கு காணப்படும். பயனுள்ள முடிவுகள் எடுப்பது உங்களுக்கு நல்லது. உங்கள் பணிகளை இன்று விரும்பி செய்வீர்கள். உங்கள் துணையுடன் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். பணப்புழக்கம் அதிக அளவு காணப்படும் .ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்:
தகவல் பரிமாற்றத்தின் போது கவனம் வேண்டும். நீங்கள் செய்யும் பணியில் தொழில் சார்ந்த அணுகுமுறை வேண்டும். இன்று உங்கள் துணையுடன் நகைச்சுவையான அணுகுமுறை வேண்டும். இன்று பண பற்றாக்குறை ஏற்படும் .தொண்டை வலி ஏற்பட வாய்ப்புள்ளது, குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்கவும்.
கடகம்:
இன்று ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் காட்டுவதன் மூலம் ஆறுதல் கிடைக்கும். உங்கள் பணியிடத்தில் சூழ்நிலைகளை அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. பண விஷயத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். உங்கள் தாயாரின் உடல் நலத்திற்காக செலவு செய்ய நேரும் .
சிம்மம்:
இன்றைய நாளை கவனமுடன் திட்டமிட வேண்டும் .உங்கள் செயல்களை ஆற்றுவதில் சில தடைகள் காணப்படும். பணிகளை எளிதாக செய்ய முயற்சிகள் தேவை. உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறையை மேற்கொள்ளுங்கள். தேவையற்ற பண செலவு ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கன்னி:
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும், முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். புதிய வாய்ப்புகள் இன்றைய நாளை சிறப்பானதாக செய்யும். உங்கள் துணையுடன் நகைச்சுவையாக பேசுவீர்கள். இன்று பணப்புழக்கம் சரளமாக காணப்படும் .உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம்:
இன்று உங்கள் விருப்பங்கள் மேம்படும் நாள் ,பயணங்களுக்கான வாய்ப்பு உள்ளது .உங்களின் உழைப்பிற்காக ஊக்கத்தொகையும் சலுகையும் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் கலகலப்பாக பழக வேண்டும். இன்று பண வரவும் அதிகமாக இருக்கும் .ஆரோக்கியமும் சிறப்பாக உள்ளது.
விருச்சிகம்:
இன்று இறைவழிபாடு மேற்கொள்வது ஆறுதலை தரும். உங்கள் பணிகளை திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம். உங்கள் துணையுடன் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. செலவினங்கள் சற்று அதிகரிக்க வாய்ப்புண்டு .ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
தனுசு:
உங்கள் விருப்பங்கள் நிறைவேற உகந்த நாள் அல்ல, முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கக் கூடாது. பணிகள் சற்று கடினமாக இருக்கும். உங்கள் நல்ல மனநிலையை மட்டும் துணையுடன் வெளிப்படுத்தினால் மகிழ்ச்சி கிடைக்கும். இன்று அதிர்ஷ்டம் குறைவான நாள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்கவும்.
மகரம்:
உங்கள் விருப்பங்கள் இன்று நிறைவேறும் முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். உங்கள் மேல் அதிகாரிகள் மற்றும் சகபணியாளர்களின் ஆதரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் துணையுடன் நல்லுறவு காணப்படும் .இன்று பண வளர்ச்சி ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.
கும்பம்:
உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி செயல்களில் வெற்றி பெறலாம். பணியிடத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் துணையுடன் சிறந்த தகவல் பரிமாற்றம் கொண்டிருப்பீர்கள். இன்று நிதி நிலைமை சவுகரியமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.
மீனம்:
இன்று நீங்கள் உறுதியுடனும் கவனமுடனும் செயலாற்ற வேண்டும். பணி செய்யும் இடத்தில் கவனம் தேவை. உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் செலவுகள் ஏற்படும் .இன்று பதட்டமும், தலைவலியும் ஏற்பட வாய்ப்புள்ளது.