சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று இரவில் அம்மன் தங்க கமல வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை மாத தேர்த்திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. 17-ந் தேதி தேரோட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 20-ந் தேதி தெப்ப உற்சவம் நடைபெற்றது.
unknown nodeதேரோட்டம் முடிந்து 8-ம் நாளான நேற்று காலை 10 மணிக்கு அம்மன் மூலஸ்தானத்தில் இருந்து வசந்த மண்டபத்திற்கு புறப்பாடு நடைபெற்றது மாலையில் திருமஞ்சனமும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரமும் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து இரவில் வாண வேடிக்கையுடன் அம்மன் தங்க கமல வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்