திருபுவனம் அருகே பெண் சாமியார் ஒருவர் முள்படுக்கையில் அமர்ந்து தவம் செய்து அங்குள்ள பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். 4 அடி உயரத்திற்கு முள்படுக்கை அமைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்து புண்ணிய தீர்த்தம் தெளித்த பின் அதில் ஏறி நாராராணி அம்மையார் தவம் செய்து அருள்வாக்கு கூறினார். சிவகங்கை மாவட்டத்தில் திருபுவனம் அருகே லாடனேந்தல் முத்து மாரியம்மன் கோவிலில் வருடந்தோறும் மார்கழி மாதம் வழக்கமாக பெண்சாமியார் ஒருவர் நாகராணி அம்மையார் அருள்வாக்கு கூறுவார் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் […]
சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று இரவில் அம்மன் தங்க கமல வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை மாத தேர்த்திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. 17-ந் தேதி தேரோட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 20-ந் தேதி தெப்ப உற்சவம் நடைபெற்றது. தேரோட்டம் முடிந்து 8-ம் நாளான நேற்று காலை 10 மணிக்கு அம்மன் […]
திருச்சியை அடுத்த பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரைத் தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. சித்திரை பெருந்திருவிழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் இன்று நடைபெற்ற தேரோட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். பால்குடம், காவடி, அக்னி சட்டி, குழந்தைகளுக்கான கரும்பு தொட்டில், முளைப்பாரி, கரகம், பறவைக் காவடி எடுத்தும் அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். தேரோட்டத்தின் போது வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக பக்தர்கள் மீது […]