இன்று (பிப்..,06) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
மேஷ ராசிக்காரர்கள்:
unknown nodeஇன்று உங்களின் கனவுகள் நனவாகும் நாள். இன்று காரிய வெற்றியுண்டு.தொழில் ரீதியாக புதிய பொறுப்புகள் இன்று வந்து சேரலாம். கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டுமொன்ற எண்ணம் மேலோங்கும்.மேலும் இன்று தங்கள் நினைத்த காரியம் நினைத்தபடியே நடைபெறும்.
ரிஷப ராசிக்காரர்கள்:
இன்று உங்களின் தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் ஒரு நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை இன்று வாங்கி மகிழ்வீர்கள். அலைபேசி வழித்தகவல் ஆச்சர்யமளிக்கும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட மனக்கசப்புகள் எல்லாம் மாறும்.
மிதுன ராசிக்காரர்கள்:
unknown nodeஇன்று உங்களின் இனிய வாழ்வில் ஏற்பட்ட இடையூறுகள் எல்லாம் அகலும் நாள். வாகனங்கள் சம்பந்தப்பட்ட வகையில் சில திடீர் செலவுகள் ஏற்படலாம். உதவி செய்த சிலரே உங்களை உதாசீனப்படுத்துவது கண்டு வருத்தமடையும் சூழலும் ஏற்படலாம்.
கடக ராசிக்காரர்கள்:
unknown nodeஇன்று தங்களின் நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய ஒரு நாள். உத்தியோகத்ததில் இன்று பயணங்களைத் தள்ளி வைப்பீர்கள். பணப்பொறுப்புகள் சொல்வதைத் தவிர்ப்பது தான் நல்லது. விரோதங்கள் வளராமல் இன்று பார்த்துக் கொள்ளுங்கள்.
சிம்ம ராசிக்காரர்கள் :
unknown nodeஇன்று விவாகப் பேச்சு முடிவாகும் ஒரு நாள். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். விரதம் மற்றும் வழிபாடுகளில் அதிக நம்பிக்கை வைப்பீர்கள். பணியாளர் தொல்லை அகலும். உடல் நலம் சீராகும் மற்றும் குடும்பச்சுமை கூடும்.
கன்னி ராசிக்காரர்கள் :
unknown nodeஇன்று சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும் ஒரு நாள். வீடு மற்றும் இடம் வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சியானது வெற்றி பெறும். திருமணப் பேச்சுக்கள் எல்லாம் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகம் மாற்றம் பற்றிய சிந்தனை ஆனது மேலோங்கும்..
துலாம் ராசிக்காரர்கள் :
unknown nodeஇன்று பிள்ளைகளின் உத்தியோக நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி பெறும் நாள். நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் இன்று ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் வழியில் உங்களுக்கு ஒத்துழைப்பு கிட்டும்.
விருச்சக ராசிக்காரர்கள்:
unknown nodeவிருச்சக ராசிக்காரர்கள் இன்று நீங்கள் எண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும் ஒரு நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியைக்கொண்டு வந்து சேர்ப்பார்கள்.நேற்றைய பிரச்சினை ஒன்று இன்று நல்ல முடிவிற்கு வரும்.
தனுசு ராசிக்காரர்கள்:
unknown nodeஇன்று காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி ஒன்று வந்து சேரும் நாள். ஊக்கத்தோடும் மற்றும் உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். விவாகப் பேச்சுக்கள் எல்லாம் முடிவாகலாம். குடும்பத்தில் பெரியவர்களின் பாராட்டுக்களை இன்று பெறுவீர்கள்.
மகர ராசிக்காரர்கள்:
unknown nodeஇன்று முன்னேற்றம் காண முயற்சி எடுக்க வேண்டிய ஒரு நாள். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாக தோன்றிய தகவல் எல்லாம் முடிவில் ஆதாயத்தைக் கொடுக்கும். உங்கள் செயலில் வேகம் காட்டுவீர்கள். பயணத்தால் சிறு விரயம் ஏற்படலாம்.
கும்ப ராசிக்காரர்கள்:
unknown nodeஇன்று விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய ஒரு நாள். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்து செல்வது தான் நல்லது. திடீர் பயணத்தால் வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படும். உறவினர்களின் தொல்லை அதிகரிக்கும்.
மீன ராசிக்காரர்கள்:
unknown nodeஇன்று உங்களை அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் ஒரு நாள். வெளிவட்டாரத்தில் மதிப்பு மற்றும் மரியாதை உயரும். தொலைதூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் எல்லாம் நிறைவேறலாம். பரபரப்பாகச் செயல்படுவீர்கள். இன்று வருமானம் போதுமானதாக இருக்கும்.