இன்று (ஜன..,19) இன்றைய ராசிபலன்…!!!ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?
இன்று (ஜன..,19) விளம்பி வருடம் தை மாதம் இன்றைய 12 ராசிக்காரர்களுக்கான ராசிபலன்கள்.
மேஷ ராசிக்காரர்கள்:
இன்று தைரியமும்,தன்னம்பிக்கையும் iஅதிகரிக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். உங்களின் அன்பு நண்பர்கள் ஆதாயம் தரும் தகவலை இன்று தருவர். தொழில் வளர்ச்சி இன்று திருப்தி தரும்.
ரிஷப ராசிக்காரர்கள்:
இன்று வாழ்க்கைத் தரம் உயர வழி செய்து கொள்ளும் நாள். இன்று உங்களின் கவுரவம், அந்தஸ்து உயரும் நாள். பிள்ளைகளின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் எல்லாம் விரும்பி வந்து சேருவர்.
.மிதுன ராசிக்காரர்கள்:
இன்று பொறுமையுடன் செயல்பட வேண்டிய ஒரு நாள். ஒரு வழியில் வரும் வரவுகள் எல்லாம் மற்றொரு வழியில் செலவாகலாம்.ஆகையால் கவனம் குடும்பத்தினர்கள் உங்கள் செயல்பாட்டில் குறைகளை கண்டு பிடிப்பர்.இன்று பயணத்தால் அலைச்சல்களைச் சந்திக்க நேரிடும்.
கடக ராசிக்காரர்கள்:
இன்று வரவைக் காட்டிலும் சற்று செலவு கூடும் நாள். அன்றாடப் பணிகளில் இன்று ஏதேனும் மாற்றங்கள் ஏற்படலாம். இன்று சோர்வு, சோம்பல் ஆட்கொள்ளும்.மேலும் நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை இன்று சந்திக்கும் வாய்ப்பு உருவாகும்.
சிம்ம ராசிக்காரர்கள் :
இன்று உங்களுக்கு ஆச்சர்யப்படத்தக்க சம்பவங்கள் அதிகாலையிலேயே நடைபெறும் நல்ல நாள். மேலும் அலைபேசி வழித்தகவல் அனுகூலமான மகிழ்ச்சி தரும். நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முயல்வீர்கள்.இன்று வரவு திருப்தி தரும்.
கன்னி ராசிக்காரர்கள் :
தொட்ட காரியம் எல்லாம் துளிர்விடும் ஒரு நல்ல நாள். உங்களின் தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் தோள்கொடுத்து உதவுவர்கள்.இன்று பொன்,பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் முன்னேற்றம் கூடும். அரசு வழி அனுகூலமான தகவல்கள் கிடைக்கும்.
துலாம் ராசிக்காரர்கள் :
பாகப் பிரிவினை நல்ல சுமுகமாக முடியும் ஒரு நாள். நண்பர்களிடம் பேசும்பொழுது கொஞ்சம் நாசூக்காகப் பேசுவது தான் நல்லது. இன்று உங்களின் பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும்.
விருச்சக ராசிக்காரர்கள்:
இன்று நீங்கள் தெய்வ வழிபாட்டால் திருப்தி காண வேண்டிய ஒரு நாள். வருமானம் வந்த சில நிமிடத்திலேயே செலவாகலாம். மேலும் குடும்பத்தினர்களிடம் அனுசரித்துச் செல்வது தான் நல்லது. இன்று தங்களின் பயணங்களை மாற்றியமைக்கும் சூழ்நிலை உருவாகும்.
தனுசு ராசிக்காரர்கள்:
இன்று பஞ்சாயத்துக்கள் எல்லாம் சாதகமாக முடியகூடிய நல்ல நாள். அன்னிய தேசத்திலிருந்து இன்று அனுகூலச் செய்தி வந்து சேரும். குடும்பத்தினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. மேலும் இன்று பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும்.
மகர ராசிக்காரர்கள்:
இன்று உங்களுக்கு தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடி இன்று செய்து முடிப்பீர்கள். மேலும் மாற்றுக் கருத்துடையோரின் மனம் இன்று மாறும். உங்களின் பொருளாதார நிலை உயரும்.
கும்ப ராசிக்காரர்கள்:
இன்று வீட்டுப் பராமரிப்பில் ஆர்வம் காட்டும் நாள். இன்று உங்களுக்கு வாய்ப்புகள் இல்ல வாயில் தேடி வந்து சேரும். வருமானம் திருப்தி தரும். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள உங்களுக்கு வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மீன ராசிக்காரர்கள்:
இன்று உங்களுக்கு பயணத்தால் பலன் கிடைக்கும் நல்ல நாள். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.இன்று தாய்வழி உறவினர்களால் உங்களுக்கு அனுகூலம் உண்டு. சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாவதற்கான அறிகுறிகள் இன்று தோன்றும்.