இன்று (பிப்..,01) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
மேஷ ராசிக்காரர்கள்:
unknown nodeஇன்று உங்களின் செல்வாக்கு மேலோங்கும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவார்கள். மனக்கசப்புகள் எல்லாம் இன்று மாறும்.மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். வீடு மற்றும் இடம் வாங்க எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
ரிஷப ராசிக்காரர்கள்:
இன்று விரோதங்கள் உங்களை விட்டு விலக விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். சிரித்துப் பேசும் நண்பர்களால் இன்று சில சிக்கல்கள் ஏற்படலாம். உடல் நலம் பற்றிய கவலை இன்று உருவாகும். உங்களின் பயணங்களை மாற்றியமைப்பது நல்லது.
மிதுன ராசிக்காரர்கள்:
unknown nodeஇன்று உங்களின் திருமண முயற்சி கைகூடும் நாள். திடீர்ப் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும்.நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதத்தில் நடந்து கொள்வர்.அந்நிய தேச அழைப்புகள் உங்களுக்கு ஆச்சர்யமளிக்கும். இன்று வரவு திருப்தி தரும்
கடக ராசிக்காரர்கள்:
unknown nodeஇன்று உங்களின் உத்தியோக வாய்ப்பு கைகூடும் நாள். உற்சாகம் அதிகரிக்கும். கைமாத்தாக கொடுத்த பணம் கைக்கு வந்து கிடைக்கும். பல நாட்களாக செய்ய நினைத்த வேலை ஒன்றை இன்று செய்து முடிப்பீர்கள்.
சிம்ம ராசிக்காரர்கள் :
unknown nodeஇன்று நல்ல சம்பவங்கள் நடைபெறும் ஒரு நாள். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். சொத்துக்கள் விற்பனையால் இன்று லாபம் உண்டு. தொழில் முன்னேற்றத்திற்கு புதிய பங்குதாரர்கள் உங்களோடு வந்திணைவர். .
கன்னி ராசிக்காரர்கள் :
unknown nodeஇன்று நீங்கள் கொடுத்த கடன் வசூலாகும் நாள். தொலைபேசி வாயிலாக நல்ல தகவல் ஒன்று வந்து சேரும். தாய்வழியில் தனலாபம் இன்று உண்டு. அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள்..
unknown nodeஇன்று உங்களின் புகழ் கூடும் நாள். நீண்ட நாளைய எண்ணம் ஓன்று நிறைவேறும். கொடுக்கல் மற்றும் வாங்கல்களில் ஆதாயம் கிடைக்கும். வழக்குகளிலிருந்த தேக்க நிலை மாறும். பெண்வழி பிரச்சினைகள் எல்லாம் அகலும்.
விருச்சக ராசிக்காரர்கள்:
unknown nodeநண்பர்களின் ஒத்துழைப்பால் இன்று நலம் காணும் நாள். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை உங்களுக்கு இன்று அதிகரிக்கும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
தனுசு ராசிக்காரர்கள்:
unknown nodeஇன்று எதிர்பாராத வரவு வந்து சேரும் ஒரு நாள். குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிரியமான ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு இன்று கிட்டும். செயல்பாடுகளில் அவசரத்தை தவிர்ப்பது மட்டும் நல்லது.
மகர ராசிக்காரர்கள்:
unknown nodeஇன்று விரயங்கள் கூடுகின்ற நாள்.தேக ஆரோக்கியத்தில் ஒரு தெளிவு பிறக்கும்.இன்றைய பயணத்தால் பால்ய நண்பர்களின் சந்திப்பு கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சிகள் எல்லாம் கைகூடும்.
கும்ப ராசிக்காரர்கள்:
unknown nodeஇன்று குதூகலம் கூடுகின்ற நாள். தொழிலில் புதிய கூட்டாளிகளை இணைக்கலாமா என்ற சிந்தனையானது மேலோங்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் இன்று மேலோங்கும்.
மீன ராசிக்காரர்கள்:
unknown nodeஇன்று உங்களின் வளர்ச்சி கூடும் நாள். வரவு திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு உள்ளது.மேலும் வீடு கட்டும் பணிகள் எல்லாம் கைகூடும்.