நெல்லை நெல்லையப்பர் கோவிலில் தெப்ப உற்சவம்..!

நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழாவானது ஆண்டுதோறும் வெகு விமரிசையாக சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழாவானது ஆண்டுதோறும் வெகு விமரிசையாக சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதனை போல இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழாவானது கடந்த 12 தேதி கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது.இதில்  4 நாளான  15 தேதி அன்று நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சியானது நடைபெற்றது.பின்னர் 21 தேதி தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரியும் நடைபெற்றது.

இந்நிலையில் தெப்ப உற்சவமானது நேற்று நடைபெற்றது.இந்த விழாவில் நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக மற்றும் அலங்கார தீபாராதனைகள் காட்டப்பட்டது.

பின்னர் மாலை சுவாமி அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் தெப்பக்குளத்துக்கு வந்தனர். அங்கு அலங்கரிக்கப்பட்ட வைக்கப்பட்டுள்ள தெப்பத்தில் சுவாமி- அம்பாள் எழுந்தருளி அருட்காட்சி போது சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

சுவாமி எழுந்தருளிய தெப்பக்குளத்தில் தண்ணீரானது குறைவாக இருந்ததால் தெப்பத்தை  சுற்றி வராமல் பக்தர்களுக்கு சுவாமி மற்றும் அம்பாள் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி மட்டும் நடைபெற்றது. இந்த அற்புதமான நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் நெல்லை நெல்லையப்பர் கோவில் தைப்பூச திருவிழாவின் தெப்ப உற்சவம் வெகுச் சிறப்பாக நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.