நேற்று மலையாளம் இன்று தெலுங்கு.. கூலி பட சர்ப்ரைஸ் அப்டேட்.!

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 'கூலி' படத்தில் ‘சைமன்’ என்ற கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா நடிக்கிறார்.

Coolieu pdate

சென்னை :சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘கூலி’ படத்தில் ‘சைமன்’ என்ற கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா நடிக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் “கூலி” படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினியின் அறிமுக டீசர் சில தினங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், படத்தின் முதல் ஆளாக மலையாள நடிகர்சௌபின் சாகிர் ‘Dayal’ கதாபாத்திரத்தில் நடிக்கும் போஸ்டர் பெயர் நேற்றைய தினம் வெளியானது.

இன்றைய தினம், தெலுங்கு ஸ்டார் நாகார்ஜுனா இந்த படத்தில் நடிக்கிறார் என்ற சர்ப்ரைஸ் அப்டேட் வெளியிட்டுள்ளனர்.

unknown node

நடிகர் நாகார்ஜுனா பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவ்வாறு, கூலியின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், ஒவ்வொரு நாளும் படத்தின் நடிகர்களை அறிவித்து வருகிறது போல் தெரிகிறது.

unknown node

கடந்த வாரம், கன்னட நடிகர் உபேந்திரா தனது சமூக வலைதளத்தில் இந்த படத்தில் இணைவதாக அறிவித்து, ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதனிடையே, இந்த படத்தில் ஸ்ருதி ஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடிக்கின்றன என கூறப்படுகிறது.