சிறகடிக்க ஆசை சீரியல் .. விஜயாவுக்கு பாடம் புகட்டிய சுருதி.. பயத்தில் விஜயா..!
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[ஆகஸ்ட் 29] எபிசோடில் சுருதி டெக்னாலஜி உதவியுடன் விஜயாவை குரல் மாற்றிப் பேசி பயமுறுத்துகிறார்.
மீனா ஹாஸ்பிட்டல் போறாங்க.. அங்கே சீதா பார்த்ததும் வாக்கா நம்ம கேண்டீன் போலாம்னு கூப்பிட்டு போறாங்க. கேண்டின்ல ரோகினியை பத்தி விசாரிக்கிறாங்க ..அப்போ மீனா வீட்டில் நடந்த பிரச்சனை எல்லாம் சொல்றாங்க.. இந்த விஷயம் எப்படி எல்லாருக்கும் தெரிஞ்சதுன்னு கேக்குறாங்க ..ஸ்ருதி கிட்ட நான் சொன்னேன் அவங்க மூலியமா எல்லார்க்கும் தெருஞ்சுருச்சு . இப்போ ஹாஸ்பிடல்ல சீதாவோட பாஸ் சீதாவை கூப்பிட்டு திட்டுறாங்க உங்க வேலை அக்கவுண்ட் பார்க்கிறது மட்டும்தான் தேவை இல்லாம ஏன் ரோகிணி பற்றி விசாரிச்சீங்க.. அவங்க கால் பண்ணி திட்டுறாங்க.. இது நம்ம ஹாஸ்பிடல்கே கெட்ட பெயர் ஆயிருச்சு. இனிமே இந்த வேலைக்கு நீங்க வர வேண்டாம்னு சொல்றாங்க.
சீதா உடனே மன்னிப்பு கேட்டு தன்னோட வறுமை எல்லாம் சொல்றாங்க. இத புரிஞ்சுகிட்ட அவரும் சரி இனிமேல் உங்க வேலைய மட்டும் பாருங்க அப்படின்னு சொல்லிடுறாங்க.. இப்போ பூ கட்டற அக்காவலாம் சேர்ந்து மீனாவை தேடி வராங்க.. மீனா இன்னைக்கு நைட்டு பெரிய ஆர்டர் வந்து இருக்கு நீ வந்து கொஞ்சம் உதவி பண்றியானு கேக்குறாங்க.. உடனே மீனா அவரு நான் இருந்தா தான் சரியா சாப்பிடுவாரு .. சரி நான் அவர்கிட்ட வேணா கேட்டுட்டு சொல்றேனு சொல்லும்போது முத்து கால் பண்ணிறாரு .மீனா இன்னைக்கு நைட்டு நான் வேலூர் வர சவாரி போறேன் வரமாட்டேன்னு சொல்றாங்க. உடனே மீனா கேள்வி மேல கேள்வி கேக்குறாங்க எங்க சாப்பிடுவீங்க எப்படி தூங்காம இருப்பீங்க . இதெல்லாம் கேட்ட முத்து.. மீனா போதும் மீனா நான் அழுதுடுவேன் இதுக்கு மேல கேள்வி கேட்காதே அப்படின்னு சொல்றாரு.
மீனா சிரிச்சுக்கிட்டே சரின்னு சொல்றாங்க. இப்போ மீனா பூ கட்ட வரேன்னு அந்த அக்காவுக்கு கால் பண்ணி சொல்றாங்க .. அவங்க சொல்லிடுறாங்க வேற ஆளு சேர்த்தாச்சு மீனா.. நீ உன் புருஷனுக்கே சாப்பாடு செஞ்சு போடு அப்படின்னு சொல்லிட்டு போன வச்சுடுறாங்க. ஸ்ருதிக்கு ரவி கால் பண்ணி இன்னைக்கு நைட் வர்றதுக்கு லேடாகும்ன்னு சொல்றாரு. இதை கேட்டா சுருதிக்கு கோவம் வந்து திட்டிட்டு போன வச்சிடறாங்க. ரவி மீனாவுக்கு கால் பண்ணி நைட்டு வர்றதுக்கு லேட் ஆகும் கொஞ்சம் கதவை திறந்து விட்ருங்க அண்ணி ஸ்ருதி கொஞ்சம் கோவமா இருக்கா அவளையும் கொஞ்சம் சமாதானப்படுத்திருங்க. மீனாவும் சரின்னு சொல்லிடுறாங்க.. இப்ப சுருதி கிச்சன்க்கு வந்து இன்னைக்கு ரவிக்கு சாப்பாடு சமைக்காதீங்க.
உடனே மீனா தெரியும் சுருதி.. இன்னைக்கு அவரும் வீட்டுக்கு வர மாட்டாரு அப்படின்னு சொல்லவும் , சுருதி சொல்றாங்க அப்போ இன்னைக்கு நம்ம ரெண்டு பேரும் நல்லா சாப்பிட்டு பேய் படம் பாக்கலாம் அப்படின்னு சொல்றாங்க. ஆனா மீனா சொல்லுறாங்க ஐயையோ எனக்கு பேய்னா பயம் வேண்டாம் நான் வரல அப்படின்னு சொல்றாங்க.. சும்மா வாங்க படம் தானே அப்படின்னு சொல்லி படத்தை போட்டு விடுறாங்க.. மீனா பயந்து கத்திடறாங்க இதைக் கேட்டு விஜயா வெளியே வந்து நைட்ல என்ன கத்துறீங்க அப்படின்னு கேக்குறாங்க. ஒன்னும் இல்ல ஆண்ட்டி பேய் படம் பார்த்துட்டு இருக்கிறோம் அதுக்கு ஏன் கத்துறீங்க மீனாவுக்கு பேய்னா பயமா.. அதான் பயப்படுறாங்கன்னு சொல்லவும், அவளை ஒரு குட்டி சாத்தான் அப்படின்னு மீனாவ சொல்றாங்க.
உடனே சுருதி அப்போ உங்களுக்கு பயம் இல்லையா ஆண்ட்டி எனக்கு என்ன பயம் அப்படின்னு சொல்லிட்டு ரூமுக்குள்ள போயிடறாங்க. இப்போ ஸ்ருதி மீனாவ பார்த்து என்ன மீனா ஆண்ட்டி இப்படி சொல்லிட்டு போறாங்க ..உங்களை குட்டிசாத்தான்னு சொல்றாங்க.. பேய்னா பயம் இல்லைன்னு வேற சொல்றாங்க. இருங்க அவங்கள ஒரு வழி பண்ணலாம்னு சொல்லிட்டு வாய்ஸ் மாத்தி போனையும் ஸ்பீக்கரையும் எடுத்துட்டு ரூம் பக்கத்துல போயிட்டு பேய் கத்துற மாதிரியே சிரிக்கிறதும் சவுண்ட் போடுறாங்க.. இத கேட்டு விஜயாவுக்கு பயம் வந்துருது.. பக்கத்து ரூம்ல மனோஜ்க்கும் இந்த சத்தம் கேட்டு என்னது இது இப்படி சத்தம் கேக்குது ரோகினி ரோகினி அப்படின்னு எழுப்புறாரு ரோகினி எழுந்திருக்கவே இல்ல. இப்ப சுருதி ஒரு பக்கம் சத்தம் போட்டுட்டே இருக்காங்க சிரிக்கிறது விஜயா விஜயானு மாத்தி மாத்தி கூப்பிட்டே இருக்காங்க விஜயாவும் மனோஜோம் பயந்து நடுங்கி போய் ரூம்ல நிக்கிறாங்க.