சிறகடிக்க ஆசை சீரியல்.. முத்துவும் மீனாவும் க்ரிஷை தத்தெடுக்க போகிறார்களா? அப்போ ரோகிணியின் நிலைமை?

Muthu ,Meena

சிறகடிக்க ஆசை இன்று- சிறகடிக்க  ஆசை சீரியலில் இன்றைக்காண [ஆகஸ்ட் 2] விறுவிறுப்பான காட்சிகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மீனா முத்து வாங்கிய புடவையைக் கட்டிக்கொண்டு இருவரும் சந்தோஷமாக செல்பி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  மீனா  கேக்குறாங்க இதென்ன இன்னொரு கவர்ல. அதுக்கு முத்து சொல்றாரு அது ஒரு பையனுக்கு வாங்கினேன் . நமக்கு தான் பையனே இல்லையே.க்ரிஷுக்காக வாங்கினேன் அவனை பார்த்து ரொம்ப நாளாச்சு நம்ம நாளைக்கு போய் கொடுத்துட்டு வந்துடலாம் அப்படின்னு முத்து  சொல்றாங்க.. இப்போ ரவியோட ஹோட்டலுக்கு ஸ்ருதியோடு அம்மா வராங்க. நீங்க எப்ப மாப்ள புதுசா ஹோட்டல் ஆரம்பிக்கிறது எப்ப குழந்தை பெத்துகிறது . அடுத்த வருஷத்துக்குள்ள எங்களுக்கு குழந்தை பெற்றுக் கொடுங்க அப்படின்னு சொல்லிடறாங்க.

இந்தாங்க பிளாங்  செக் ஸ்ருதியோட அப்பா உங்க கிட்ட குடுக்க சொன்னாரு அப்படின்னு குடுக்குறாங்க.. ரவி அத பாத்துட்டு வேண்டாம் ஆண்டி  நான் சமாளிச்சுக்கிறேன்னு சொல்றாரு. அவங்க கேட்காம செக்க கொடுத்துட்டு கிளம்பிடறாங்க.. இப்ப கோவத்தோட சுருதிக்கு ரவி கால் பண்றாரு .ஸ்ருதி கால் அட்டென்ட் பண்ணல நேராவே  போயிட்டு செக்கச் சுருதி மூஞ்சிலேயே தூக்கி எறிஞ்சிட்டு வராரு.. ஸ்ருதி ரவி பின்னாடியே வந்து ஏன் ரவி இப்படி பண்ற அப்படின்னு கேக்குறாங்க. உன்னை எத்தனை தடவை சொல்லி இருக்கேன் இங்க நடக்குற எந்த பிரச்சனையும் உங்க வீட்ல சொல்லாதேன்னு. நான் எதுவுமே சொல்லல ரவி அப்படின்னு சொல்றாங்க. இப்போ ரவி சொல்றாரு நான் என் அப்பா கிட்ட கூட  பணம் கேக்குறது  இல்ல நானே லோன் அரேஞ்ச் பண்ணி ஹோட்டல் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.

Ravi ,shruthi (2)

அதுவரைக்கும் வெயிட் பண்ணாம இத வச்சு நீ ஆரம்பிக்கலாம் இல்ல அப்படின்னு.. ஸுருதி சொல்லுறாங்க . ஆனா அதுக்கு ரவி கேட்கவே இல்லை.. இனிமே இந்த மாதிரி உங்க வீட்ல சொல்ற வேலையெல்லாம் வச்சுக்காத அப்படின்னு சொல்றாரு .நான் என்னோட செலவுக்கு கூட எங்க வீட்ல பணம் கேக்குறது இல்ல ரவி அப்படின்னு சொல்றாங்க. ரவியும் புரிஞ்சுகிட்டு அங்கிருந்து கிளம்பிட்டாரு.. இப்ப க்ரிஷ்  ரோகினிக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காரு.. ரோகினியும் வராங்க அம்மானு போய் கட்டி பிடிச்சுக்கிறாரு . அம்மா இன்னைக்கு என்னோட பிரெண்ட்ஸ் எல்லாருக்கும்  உங்களை அறிமுக படுத்த போறேன் .  அதுக்கு ரோகிணி இல்ல கிரிஷ்  இப்ப வேண்டாம் நன் சொல்றேன் அப்போ நீ சொல்லிக்கலாம் அப்படின்னு சொல்றாங்க.

இப்ப கிரிஷ்  ஓட வீட்டுக்கு ப்ரண்ஸ்  எல்லாரும் வராங்க.. கேக் வெட்டலாம்னு போறாங்க அப்போ அங்கே மீனாவும் முத்துவும் வந்துடறாங்க. ரோகினியோட அம்மா ஷாக் ஆயிடறாங்க. ரோகினி கிச்சன்ல ஒளிஞ்சிக்கிறாங்க .இப்ப முத்து கிரிஷை  தூக்கிட்டு என்ன க்ரிஷ் புது டிரஸ் எல்லாம் போட்டு இருக்க. இன்னைக்கு என்னோட பிறந்த நாள் அங்கிள் அப்படின்னு சொல்றான் .அப்போ கரெக்டா தான் வந்திருக்கிறோம் அப்படின்னு முத்துவும் மீனாவும் சந்தோசமா இருக்காங்க.. இப்ப கேக் வெட்டலாம்னு முத்து கிரிஷை  தூக்கிட்டு நிக்கிறாரு. அப்போ கிரிஷ்  சொல்கிறான் அம்மா அத்தை அப்படின்னு உளர்றான்.. இதைக்கேட்ட முத்து இன்னைக்கு கூட உங்க பொண்ணு வரலையா அப்படின்னு கேக்குறாரு,.

sirakadikka asai 2 (1)

சரி வாங்க மா உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும் அப்படின்னு வெளியில கூட்டிட்டு போறாங்க. ரோகிணியோட   அம்மா கிட்ட  கிரிஷுக்கு  அடிபட்ட அப்பவும்  வரல. இப்பவும் வரலைன்னா என்ன அர்த்தம் . உங்க பொண்ணோட போன் நம்பர் குடுங்க நாங்களே பேசுகிறோம் அப்படின்னு சொல்றாங்க .அதுக்கு ரோகிணி ஓட அம்மா சொல்லுறாங்க  அவ வரமாட்டாப்பா.. இதுக்கெல்லாம் காரணம் நான் தான் அவளுக்கு 19 வயசு இருக்கும்போது ஒரு பணக்கார மாப்பிள்ளை பொண்ணு கேட்டாரு அவருக்கு கொஞ்சம் வயசு அதிகம். குடும்ப கஷ்டத்துல கட்டிக் கொடுத்துட்டேன். கொஞ்ச நாள்ல அவர் இறந்துட்டாரு.. கிரிஷ  நான் தான்   வளர்க்கறேன் .அவ கோவத்துல இங்க வர்றதே இல்லை அப்படின்னு சொல்லுறாங்க .. இதையெல்லாம் ரோகிணி கேட்டு ஒரு பக்கம் அதிர்ச்சியா இருக்கிறாங்க .

முத்துவும் மீனாவும் என்ன சொல்றதுன்னு தெரியாம பாத்துட்டு இருக்காங்க.. இதோட இன்னைக்கு ஓட எபிசோட் முடிந்தது நாளைக்கான ப்ரோமோல ரோகினி அவங்க அம்மாவ திட்டுறாங்க நீ ஏன் அவங்க கிட்ட மூஞ்சி கொடுத்து பேசுற அதனால தானே அவங்க இங்க வராங்க..  முத்துவும் மீனாவும் கார்ல போயிட்டு இருக்காங்க அப்ப மீனா சொல்றாங்க பேசாம நம்ம கிரிஷ  தத்து எடுத்து வளர்க்கலாமா அப்படின்னு கேக்குறாங்க முத்து ஷாக் ஆகி கார நிறுத்துறாரு .. முத்து நாளைக்கு என்ன சொல்ல போறாருன்னு வரப்போற எபிசோடு பார்க்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்