சிறகடிக்க ஆசை சீரியல் -“ஆண்ட்டி என்னோட பொருளை தொடாதீங்க” விஜயாவை வார்னிங் செய்யும் சுருதி..!

சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[அக்டோபர் 8] எபிசோடில் ஸ்ருதியிடம் வாங்கி கட்டிக் கொள்ளும் விஜயா..

vijaya (11) (1)

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[அக்டோபர் 8] எபிசோடில் ஸ்ருதியிடம் வாங்கி கட்டிக் கொள்ளும் விஜயா..

ஸ்ருதி மேல் கோவபடும் விஜயா  ;

ஸ்ருதிக்கு பார்சல் வந்திருக்கு.. இப்ப மீனா வாங்க போறாங்க விஜயா சொல்றாங்க அது என் மருமக என்கிட்ட குடுங்கன்னு வாங்கிட்டு போயி பிரிச்சு பாக்க போறாங்க மீனா சொல்றாங்க பிரிக்காதீங்க அப்படின்னு அதை கேட்காம அவ என் மருமக நீ தேவை இல்லாம இதுல மூக்கை நுழைக்காதுன்னு சொல்றாங்க .இப்போ பிரிக்குறாங்க.. அதுல ஹெட்போன் இருக்கு.. அதை காதுல  மாட்டிகிட்டு  என்ன ஒண்ணுமே கேக்க மாட்டேங்குது கெட்டுப்போனதாக கொடுத்து அனுப்பிட்டாங்களா அப்படின்னு சொல்றாங்க ..அதுக்கு மீனா  அத்தை போன்ல கனெக்ட் பண்ண தான் கேட்கும்.. உடனே விஜயா எல்லாம் எங்களுக்கு தெரியும் அப்படின்னு  பாட்டு கேட்டுட்டு இருக்கும்போது ரவியும்  சுருதியும் வராங்க.. ஸ்ருதி  உனக்கு பார்சல்  அப்படின்னு ஹெட் போன் குடுக்குறாங்க.. இதுவா ஆன்ட்டின்னு கேட்க ஆமான்னு சொல்ல அப்ப எனக்கு வந்த பார்சல்ல நீங்க ஏன் பிரிச்சீங்க..

நீ என்னோட மருமக தானே அப்படின்னு விஜயா சொல்ல.. ரவியாவே  இருந்தாலும் என்னோட பர்சனல் திங்ஸை எனக்கு யாரு எடுத்தாலும் பிடிக்காது அப்படின்னு முகத்துல அடிச்ச மாதிரி சொல்றாங்க.. ரவியும் விடு சுருதி அம்மா இனிமேல் அந்த மாதிரி பண்ண மாட்டாங்க .. டேய் இது என் வீடு உன் பொண்டாட்டிக்கு சொல்ல மாட்டியா நீயும் பேசாம பார்த்துகிட்டே நிக்கிற அப்படின்னு ரவியை திட்டுறாங்க அம்மா அவளோட  பர்சனல் திங்ஸ் எடுத்தா  பிடிக்காது.. எல்லாருமே பொண்டாட்டி பேச்சை கேட்டு ஆடுறீங்களா அப்படின்னு சொல்லிட்டு கிளம்பிடறாங்க.. இப்போ மீனவ திட்டுறாங்க எல்லாம் உன்னால தாண்டி .. அத்த இதுக்கு கூட காரணம் நான் தானா..  நீங்க பிரிக்காம இருந்திருந்தால் இந்த பிரச்சனையே வந்து இருக்காதுன்னு சொல்லுறாங்க .. இப்போ காலையில முத்து மீனாவும் சத்யாவோட காலேஜுக்கு போறாங்க.. அங்க பியூனை பார்த்து வாங்க டீ சாப்பிட்டு வரலாம்னு முத்து கூபிட்டுபோறாரு  ..

முத்துவை போலீஸ் அரெஸ்ட் செய்தனர் ;

muthu (7) (1)

பிரின்ஸ்பால பத்தி விசாரிக்கிறார்.. அந்த அந்த பியூனும்  பிரின்ஸ்பால் பத்தி சொல்ல ஆரம்பிக்கிறாரு ..அவரு ஒரு சிடுமூஞ்சி,. இப்போ மீனா சொல்றாங்க என் தம்பிய எக்ஸாம் எழுதக்கூடாதுன்னு   சொல்லி இருக்கிறாரே அதுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணுங்கன்னு கேட்க ..என்னால எதுவுமே பண்ண முடியாது அந்த ஆள் அப்படித்தான் ஒரு டைம் முடிவெடுத்துட்டான்னா மாத்திக்கவே மாட்டாரு.. சின்னதா தப்பு பண்ணிட்டா கூட இந்த மாதிரி பெரிய பெரிய பனிஷ்மென்ட் எல்லாம் கொடுப்பாரு அப்படின்னு சொல்றாங்க.. இப்பதாமா அவர் இப்படி ஆயிட்டாரு ..முன்னாடி எல்லாம் நல்ல குணம் உள்ளவரு.. அவரோட பொண்ணு லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிடுச்சு அவன் போதைக்கு அடிமையானவனா இருக்கிறான் இப்ப அவங்க வீட்லதான் அந்த பொண்ணு இருக்குது அதனாலதான் விரக்தியில இந்த மாதிரி எல்லாம் நடந்துக்குறாரு மத்தபடி நல்ல குணம்தான்.

அவரோட வீடு கூட இங்கதான் பக்கத்துல ரெண்டு கிலோமீட்டர்ல  இருக்கு ..முத்துவும்  அண்ணே எங்க இருக்குது எனக்கு கொஞ்சம் சொல்றீங்களா? அவரும்  வீட்டோட அட்ரஸ் சொல்றாரு.. முத்துவும் அவருக்கு செலவுக்கு பணம் கொடுத்துட்டு ரொம்ப நன்றினு  சொல்லுறாரு..  இப்ப மனோஜ் ஷோரூம் ல ரெண்டு நாளா சேல்ஸ்  ஆகலைன்னு சோகமா சொல்லிட்டு  இருக்காரு.. அங்க  வேலை செய்ற ஒருத்தர்  மனோஜ் கிட்ட எனக்கு அட்வான்ஸ் வேணும்னு கேட்க  ரெண்டு நாளா சேல்ஸ்  இல்ல பார்த்தியா இப்ப வந்து அட்வான்ஸ் கேக்குற அப்படின்னு மனோஜ் சொல்றாரு.. நீங்கதானே என்னோட ஓனர் அதான் உங்ககிட்ட கேட்டேன்னு சொல்லுறாரு..  சரி எப்ப வேணும் அப்படின்னு கேட்க அடுத்த வாரம் சார் .சரி பார்க்கலாம் இப்ப போய் நீ வேலைய பாரு அப்படின்னு சொல்றாரு.

இப்போ ஒரு கஸ்டமர் வராரு அவர பார்த்தது மனோஜ் நீ அந்த லாட்டரில பொருள் வாங்க வந்தவன் தானே ..இப்ப என்ன பிரச்சனை பண்ணலாம்னு வந்து இருக்கியா அப்படின்னு கேக்குறாரு. உடனே அவர் சொல்றாரு நான் பிரச்சனை பண்ண வரல இப்போ நான் கோடீஸ்வரன் அப்படின்னு சொல்ல மனோஜ் ஷாக்கா  பாத்துட்டு இருக்காரு இதோட இன்னைக்கு  எபிசோடை முடிச்சு இருக்காங்க.. நாளைக்கு  ப்ரோமோல முத்துவ போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டு போறாங்க..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்