போண்டா மணிக்கு தன்னால் இயன்ற உதவியை செய்வேன் – நடிகர் வடிவேலு உறுதி.!

நடிகர் வடிவேலு நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது அங்கு அவருக்கு சிறப்பு வரவேற்பு

நடிகர் வடிவேலு நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது அங்கு அவருக்கு சிறப்பு வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கோயிலுக்கு சென்று அவர் முருகனை வழிபட்டார்.

unknown node

தரிசனம் செய்து முடித்த பிறகு கோயில் பிரகாரத்தில் உள்ள சண்முகர் சன்னதி, பெருமாள் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று அங்குள்ள தெய்வங்களை வழிபாட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

இதையும் படியுங்களேன்-பத்து நிமிஷத்துல முடிச்சிட்டு கிளம்பிடுவேன்…. இளம் நடிகை அந்த விஷயத்துல ரெம்ப ஃபாஸ்ட்..!

unknown node

அப்போது செய்தியாளர் ஒருவர் கிட்னி செயலிழப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போண்டாமணிக்கு உதவி செய்வீர்களா என்பது போல கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த வடிவேல் “உடல் நலக்குறைவால் இருக்கும் நடிகர் போண்டா மணிக்கு தன்னால் இயன்ற உதவியை செய்வேன்” என்று வாக்குறுதி கொடுத்துள்ளார்.

unknown node

மேலும் பேசிய வடிவேலு ” நாய் சேகர் ரிட்டன்ஸ், மாமன்னன், சந்திரமுகி-2 போன்ற படங்களில் நடித்து வருகிறேன். இந்த படங்கள் அனைத்தும் கண்டிப்பாக உங்களுக்கு பிடித்த மாதிரி இருக்கும். மாமன்னன் திரைப்படம் நன்றாக வந்திருக்கிறது. இப்படத்தில் நான் குணசித்திர நடிகனாக நடித்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.