சிம்பு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் எனும் படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த படம் பொங்கலுக்கு வருவதாக அறிவித்து பின்னர் சில காரணங்களால் பிப்ரவரி முதல் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் மேகா ஆகாஷ், கேத்தரின் தெரஷா, மஹத் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து வருகிறார். இந்த படத்திலிருந்து முதல் பாடலான ரெட் கார்டு எனும் பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்த பாடலான வாங்க மச்சான் வாங்க எனும் பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடல் பழைய தமிழ் பாடலை ரிமேக் செய்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்ப்படுகிறது.
DINASUVADU
unknown node