கன்னட சினிமாவில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கி வைத்துள்ள தல அஜித்!!

தல அஜித் நடிப்பில் ஜனவரி 10 அன்று பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் 'விஸ்வாசம்' இப்படத்துடன் சூப்பர் ஸ்டாரின் 'பேட்ட' படமும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகி

தல அஜித் நடிப்பில் ஜனவரி 10 அன்று பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ‘விஸ்வாசம்’ இப்படத்துடன் சூப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’ படமும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகி இருந்தது. அப்படி இரூந்தும் விஸ்வாசம் திரைப்படம் நல்ல வசூலை 25,வது நாளை தாண்டியும் குவித்து வருகிறது.

இந்நிலையில் கன்னட சினிமாவில் இதுவரை வேறாறு மொழி படங்கள் அந்தந்த மொழிகளிலே வெளியாகி வந்தன. இதனை தொடர்ந்து அஜித் நடித்த என்னை அறிந்தால் படம் கன்னடத்தில் ‘சத்யதேவ் ஐ.பி.எஸ்’ என வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை அடுத்து வேதாளம், விவேகம் ஆகிய படங்களும் மொழி மாற்றம் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றன. இதன் காரணமாக தற்போது விஸ்வாசம் திரைப்படமும் அதே போல ‘ஜகமல்லா’ என பெயரிடப்பட்டு டப் செய்யப்பட்டு ரிலீஸாக உள்ளது. வேற்று மொழி ஹீரோ கன்னடத்தில் டப் செய்து தொடர்ந்து 3 படங்கள் ஹிட் கொடுத்து நான்காவது படத்தை டப் செய்தது முதலில் தல  அஜித் படம்தான்.

DINASUVADU