பேட்ட வெளியாகும் அதே நாளில் தான் விஸ்வாசமும் பராக்…..போட்டுடைத்த படக்குழு…!!!

Default Image

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் பேட்ட படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிக பொருட்செலவில்  உருவாக்கி உள்ளது. இந்நிலையில் படத்தின் மூன்றாவது போஸ்டரில் ‘பொங்கலுக்கு பராக்’ என்று அறிவித்து படம் பொங்கலுக்கு வருகிறது என்பதை உறுதிப்படுத்தியது.

Image result for RAJINI VISWASAM AJITH

இந்நிலையில் தான் பொங்கலுக்கு நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படமும் வருகிறது என்ற தகவலை படக்குழு தெரிவித்து வந்தது.இந்நிலையில் தற்போது விஸ்வாசம், நடிகர் சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் மற்றும் ஜிவியின் வாட்ச்மேன் உள்ளிட்ட படங்கள் பின்வாங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

Image result for RAJINI VISWASAM AJITH

ஆனால் இதில் பெரிதும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் அஜித்தின் ‘விஸ்வாசம்’ படம் பொங்கலுக்கு தான் வெளியீடு என்று உறுதிப் பட தயாரிப்பாளர் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார்.

Image result for RAJINI VISWASAM AJITH

இதனிடையே முதல்முறையாக  சூப்பர் ஸ்டார் (ம) அல்டிமேட் ஸ்டாரும் நேரடியாக மோதவுள்ளன. இப்போய நிலவரப்படி இரண்டுமே பின்வாங்கவில்லை என்று தெரிகிறது.

Image result for RAJINI AJITH

மேலும் இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வெளிவர தயாராகி வரும் விஸ்வாசம் படத்தினுடைய இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. எனவே இரண்டு படங்களுமே டிசம்பர் மாதம் முதல் தொடர்ச்சியாக டீஸர், ட்ரெய்லர், பாடல்கள் என தொடர்ச்சியாக வெளியீட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்