தமிழ் சினிமாவில்ஏற்கெனவே ஸ்டரைக் நடப்பதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். இந்த நேரத்தில் விஜய்-ஷாலினி நடித்த வெற்றி படமான காதலுக்கு மரியாதை படஎடிட்டர் டிஆர். சேகர்அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
81 வயதான சேகர் அவர்களின் இறுதி ஊர்வலம் (22.03.2018) இன்று 5 மணியளவில் திருச்சியில் நடைபெற இருக்கிறது.
80களில் பிரபல எடிட்டராக இருந்த இவர்பூவே பூச்சூடவா, பூவிழி வாசலிலே, அரங்கேற்ற வேலை, வருஷம் பதினாறு, காதலுக்கு மரியாதைபோன்ற படங்களில் பணிபுரிந்துள்ளார்.
இவரது இரங்கல் செய்தியை கேள்விபட்ட பிரபலங்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.zj