1000 பேருக்கு இன்று நலத்திட்ட உதவிகளை வழங்கும் விஜய்.!

கடந்த 17,18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. வரலாறு காணாத

vijay makkal iyakkam - vijay

கடந்த 17,18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. வரலாறு காணாத கனமழையால், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், வெள்ளத்தால் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து தவிப்புக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில், நடிகர் விஜய் நலத்திட்ட உதவிகளை நேரடியாக வழங்க உள்ளார்.  நெல்லை கேடிசி நகரில் உள்ள மாதா மஹாலில்  காலை 12 மணிக்கு நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்று சுமார் 1000 பேருக்கு, அரிசி, போர்வை உள்ளிட்ட பொருட்களை வழங்குகிறார்.

மேலும், இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடியில் இருந்து 400 மேற்பட்ட பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தற்போது, சென்னையில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தருகிறார்.

தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்!

இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்கிறார்.  பொது மக்கள், ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றும், டோக்கன் வைத்திருக்கும் நபர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.