பாலிவுட்டில் பலமாக கால்பதித்த விஜய் சேதுபதி.! கத்ரினா கைஃப் ஹீரோயின்.! மெகா ஹிட் இயக்குனர்.!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக உருவாகும் பாலிவுட் படத்திற்கு மெரி கிறிஸ்த்மஸ் என பெயரிடப்பட்டுள்ளது. கத்ரினா கைப் இந்த படத்தில் ஹீரோயினாக

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக உருவாகும் பாலிவுட் படத்திற்கு மெரி கிறிஸ்த்மஸ் என பெயரிடப்பட்டுள்ளது. கத்ரினா கைப் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. கோலிவுட் வரலாறை எழுதும் போது இவருக்கான இடம் எப்போதும் நிரந்தமாக இவருக்காக இருக்கும். கடந்த 11 வருடங்களில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்து இந்திய அளவில் நல்ல நடிகராக வலம் வருகிறார். மொழிகள் கடந்து பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.

இவர் ஏற்கனவே சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள மும்பைக்கார் எனும் பாலிவுட் படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது அதனை தொடர்ந்து மீண்டும் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க உள்ளார். அந்த படத்தை அந்தாதூண் எனும் பாலிவுட் சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் அடுத்து விஜய் சேதுபதியை வைத்து ஹிந்தியில் படம் இயக்க உள்ளார்.

unknown node

மேரி கிறிஸ்துமஸ் என இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் முன்னணி நடிகை கத்ரினா கைஃப் நடிக்க உள்ளாராம். இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இபபட முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. விரைவில் இப்பட ஷூட்டிங் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலிவுட்டில் பலமாக கால்பதித்த விஜய் சேதுபதி.! கத்ரினா கைஃப் ஹீரோயின்.! மெகா ஹிட் இயக்குனர்.!