"கனியன் நீ வாழ்க" ரசிகரின் குழந்தையை விடாமல் கொஞ்சிய விஜய் சேதுபதி.. க்யூட் வீடியோ!

ரசிகர் மன்ற பொதுச்செயலாளரின் ஆண் குழந்தைக்கு கனியன் என பெயர் சூட்டிய நடிகர் விஜய் சேதுபதி.

Vijay Sethupathi

சென்னை :மக்கள் செல்வன் விஜய் சேதுபதி எப்போதுமே தனது ரசிகர்களிடம் அன்பான உறவுமுறை  கொண்டவர். அவரது திரைப்படங்கள், அவரின் நடிப்பு, மற்றும் கதாபாத்திரங்கள் ரசிகர்களுக்கு பிடிக்குமளவுக்கு நன்றாக இருக்கிறது.

இதனால், அவரது ரசிகர்கள் அவருக்கு மிகுந்த ஆதரவு வழங்கி வருகிறார்கள். அவரது நடிப்பு பல்வேறு உணர்வுகளை ஏற்படுத்தி, ரசிகர்களுடன் ஒரு ஆழ்ந்த மனத் தொடர்பை ஏற்படுத்துகிறது. இதனிடையே, ரசிகர் ஒருவரின் குழந்தைக்கு அவர் பெயர் வைத்தார். குழந்தையின் கன்னத்தில் அவர் முத்தமிடும் வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த ரசிகர் வேறுயாருமல்ல, அவரது தனது ரசிகர் மன்றத்தில் பொதுச்செயலாளராக உள்ள குமரன் என்பவருக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு ‘கனியன்’ என பெயர் சூட்டிய நடிகர் விஜய் சேதுபதி, குழந்தையை விடாமல் அழகாக கொஞ்சினார். “கனியன் நீ வாழ்க” என்று கூறிய அந்த க்யூட் வீடியோ இதோ…

unknown node

இதற்கிடையில்,நடிகர் விஜய் சேதுபதி மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ட்ரைன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமில்லாமல், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் விலகியதை தொடர்ந்து விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.

நன்றி PT நியூஸ்…

"கனியன் நீ வாழ்க" ரசிகரின் குழந்தையை விடாமல் கொஞ்சிய விஜய் சேதுபதி.. க்யூட் வீடியோ!