"சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்"! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

விஜயின் கோட் திரைப்படத்தையும், விஜயின் நடிப்பையும் பாராட்டி பாடலாசிரியர் தாமரை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Thamari about Goat movie

சென்னை :கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல் நாளே 126 கோடி வசூல் செய்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த படத்தை பார்த்த திரை பிரபலங்கள் பலரும் பாசிட்டிவ் ரிவ்யூஸ்களை கூறியதோடு படக்குழுவுக்கு வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், படத்தில் இரு வேடங்களில் நடித்துள்ள விஜய், இரண்டு வேடங்களுக்கும் தனித்துவமான நடிப்பை விஜய் வெளிக்காட்டியிருப்பார். படம் பார்த்த பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் அவரது நடிப்பை புகழ்ந்து வருகின்றனர்.

இதில், படத்திற்கு ஒரு சில எதிர்மறையான விமர்சனங்களை ஒரு சில ரசிகர்கள் கூறினாலும் விஜயின் நடிப்பை குறித்து பாராட்டு மட்டுமே வருகிறது.அந்த வரிசையில் பாடலாசிரியர் தாமரையும் GOAT படத்தை பார்த்து விட்டு அதில் விஜயின் நடிப்பை புகழ்ந்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

unknown node

இது குறித்து அவர் அந்த பதிவில், ” நேற்று நான் கோட் படத்தை பார்த்தேன். படத்தில் அற்புதமான பல விஷயங்கள் உள்ளது.பெர்ஃபார்மர்’ விஜய் சார் ஒவ்வொரு படத்துக்கும் நல்லா வந்துக்கிட்டு இருக்கார். அவர் இப்போது சினிமாவை விட்டு வெளியேறி நம் இண்டஸ்ட்ரியின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்” எனக் கூறியுள்ளார்.