ஷாருக்கான் படத்தில் முக்கிய வேடத்தில் விஜய்... எல்லாம் அன்பு தம்பி அட்லீகாக மட்டுமே

நடிகர் ஷாருக்கான் தற்போது நடித்து வரும் "ஜவான்" படத்தில் விஜய் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் ஷாருக்கான் தற்போது நடித்து வரும் “ஜவான்” படத்தில் விஜய் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் ‘ஜவான்’.  இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். இது அட்லீயின் முதல் பாலிவுட் திரைப்படம். இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

unknown node

இந்த படத்தில் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது இந்த படத்தில் நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்காக ஒரு நாள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.

unknown node

அதைபோல், படத்தில் நடிப்பதற்காக விஜய் எந்த ஒரு சம்பளமும் வாங்க வில்லையாம். மேலும், விஜய் நடிக்கும் அந்த சில நிமிட காட்சிகளை சென்னையில்  படமாக்க உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node

விஜய்யை வைத்து தேறி, மெர்சல், பிகில் என மூன்று மெகா ஹிட் திரைப்படங்களை அட்லீ இயக்கியதன் காரணமாக தான், ஷாருக்கான் படத்தில் கேமியோ ரோலில் விஜய் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.