விஜயை இன்று வரை மறக்க முடியாது – கத்ரினா கைப் ஓபன் டாக்

This news gives information about Vijay can not be forgotten today - Katrina Kaip Open Talk

நடிகர் விஜய்யுடன் நடித்த பல நடிகைகள் ,நடிகர்கள் அவரின் குணம் பற்றி பலர் நாம் பேசி கேட்டிருப்போம்.அவர்களில் பலர் கூறுவது அவர் அமைதியாக இருப்பார், அதிகம் பேசமாட்டார் என கூறுவார்கள்.

இந்நிலையில் விஜய்யுடன் கோகோ கோலா விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகை கத்ரினா கைப் தற்போது விஜய் பற்றி நெகிழ்ச்சியாக ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

“ஊட்டியில் தான் விளம்பர படப்பிடிப்பு நடந்தது. விளம்பர படப்பிடிப்புநடந்த பிறகுநாங்கள் அனைவரும் தரையில் தான் அமர்ந்திருந்தோம். நானும் தரையில் அமர்ந்து எனது போனை பார்த்துக்கொண்டிருந்தேன்.அப்போது என் முன்னால் ஒருவர் நின்றார்.

நான் யாரு என்று பார்க்காமல் எனது போனையே பார்த்துக்கொண்டிருந்தேன். வெகு நேரம் ஆகியும் அந்த நபர் என் பக்கத்திலே நின்றார்.யார் என்று மேலே பார்த்தபோது அது விஜய் என தெரிந்தது.

நீங்களா சார் ஒரு வார்த்தை நீங்க கூப்பிடக்கூடாத என கேட்டேன்.நீங்கள் உங்கள் போனினை ஆர்வத்துடன் பார்த்து கொண்டு இருந்ததால் உங்களை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக நின்றேன் என்றார்.

மேலும் உங்களுக்கு  goodbye சொல்வதற்காக தான் நின்றேன் என்றார்.ஒரு சூப்பர் ஸ்டார் எனக்காக goodbye சொல்வதற்காக காத்துகொண்டியிருந்தார்.என்பதை இன்று வரையும் மறக்க முடியாது நிகழ்வு என கூறினார்.