விஜய் ஆண்டனிக்காக ஒன்று கூடிய வெற்றிமாறன்..வெங்கட் பிரபு.. பா.ரஞ்சித்.! பாச தம்பிகளின் வைரல் வீடியோ

இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் திரைப்படம் "ரத்தம்". இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மஹிமா நம்பியார் நடித்து

இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் திரைப்படம் “ரத்தம்”. இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மஹிமா நம்பியார் நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் கூட, சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம்.

unknown node

Ratham 2nd Look [Image Source: Twitter ]

இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது தாய்லாந்தில் விறு விறுப்பாகி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படம் குறித்த சூப்பரான அப்டேட் ஒன்றை விஜய் ஆண்டனி கொடுத்துள்ளார்.

unknown node

Vijay Antony

அது என்னவென்றால், ரத்தம் திரைப்படத்தில் பிரபல இயக்குனர்களான வெற்றிமாறன், வெங்கட் பிரபு, பா.ரஞ்சித் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்களாம். மேலும் அதற்கான டீசர் வரும் டிசம்பர் 5 -ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என ஒரு வீடியோவை வெளியீட்டு அறிவித்துள்ளார். வீடியோவில் ஒரு கூட்டு கிளியாக பாடல் வருகிறது. இதனால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்துடன் உள்ளனர்.

unknown node

மேலும் இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது விக்ரம் வைத்து தங்கலான் படத்தையும், வெற்றிமாறன் விஜய் சேதுபதி, சூரியை வைத்து விடுதலை படத்தையும், வெங்கட் பிரபு நாகசைதன்யாவை வைத்து NC22 என்ற படத்தையும் இயக்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.