ரகுமான் இசையில் முதன்முறையாக விஜய் பாடிய பாடல் வெளியானது!வெறித்தனமாக கொண்டாடும் விஜய் ரசிகர்கள்

பிகில் படத்தில் தளபதி விஜய் படித்துள்ள வெறித்தனம் பாடல் வெளியாகியுள்ளது.

பிகில் படத்தில் தளபதி விஜய் படித்துள்ள வெறித்தனம் பாடல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் பிகில். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து வருகிறார்.மேலும் இந்த படத்தில் நயன்தாரா,யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் ரகுமான் படித்த சிங்கப்பெண்ணே பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இந்த நிலையில் தான் நேற்று படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்தார்.இதனையடுத்து ரகுமான் இசையில் விஜய் படித்த வெறித்தனம் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தெரிவித்தார்.இதனைத்தொடர்ந்து இன்று மாலை தளபதி விஜய் படித்த வெறித்தனம் பாடல் வெளியாகியுள்ளது.

unknown node

ரகுமான் இசையில் இந்த பாடலை விஜய் படித்துள்ளதால் அவரது ரசிகர்கள்  இதனை வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.ரகுமான் இசையில் விஜய் முதன்முறையாக பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.