வெந்து தணிந்தது காடு படத்தில் இருந்து சிறு வீடியோ கிளிசம்ப்ஸாக டிசம்பர் 10 அன்று மதியம் 1.26க்கு வெளியாக உள்ளது.
சிலம்பரசன் நடிப்பில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார். வழக்கமாக இருக்கும் கெளதம் படங்களை போல அல்லாமல் இது புதுவிதமாக தயாராகி வருகிறது.
கெளதம் மேனன் முதன் முறையாக ஒரு நாவலை மையமாக கொண்டு கதைக்களம் அமைத்து படமாக்கி வருகிறார். தென் தமிழகம், மும்பை, சென்னை என பட ஷூட்டிங் வேக வேகமாக நடைபெற்று வருகிறது.
unknown nodeஇந்நிலையில், படத்தில் இருந்து சிறு வீடியோ கிளிசம்ப்ஸாக டிசம்பர் 10 அன்று மதியம் 1.26க்கு வெளியாக உள்ளது. இதற்கு முன்னர் இதே போல கிளிசம்பஸ் வீடியோ அஜித்தின் வலிமை படத்திற்கும், கமல்ஹாசனின் விக்ரம் படத்திற்கும் வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.