விஸ்வாசம் படத்தின் இரண்டாம் லுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அஜித்-இயக்குநர் கூட்டணியில் உருவாகி வரும் படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார்.சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார்.நடிகர் அஜித்தின் 58-வது படமாக உருவாகி வரும் விஸ்வாசம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.படப்பிடிப்பு தள்ளிப்போனது. இதனால் படம் பொங்கலுக்கு வெளியாவதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.
unknown nodeஃபர்ஸ்ட் லுக்கை கொண்டாடிய அஜித் ரசிகர்கள் நீண்ட நாட்களாக படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக காத்திருந்தனர். இதேபோல் விஸ்வாசம் திருவிழா என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி படத்தின் அப்டேட்டை வெளியிட படக்குழுவுக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் விஸ்வாசம் படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் அஜித் வேட்டி சட்டையுடன் இருக்கும் புகைப்படத்தை தமிழர் திருநாள் வாழ்த்துகள் மற்றும் விஸ்வாசம் திருவிழா என்ற ஹேஷ் டேக்குடன் வெளியிட்டிருந்தார்.இந்த ஹேஷ்டேக் வெளியான சில நிமிடங்களில் வைரல் டிரெண்டிங்கானது. இதையடுத்து இன்று படத்தின் இரண்டாம் லுக் வெளியிடப்படும் என்று நடிகர் அஜித்தின் மேலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.