வணங்கான் ஓவர்.! 'அருவா'- வை கையில் எடுக்கும் சூர்யா.! மீண்டும் இணையும் பிளாக் பஸ்டர் கூட்டணி.

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் "சூர்யா 42" திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும்“சூர்யா 42”திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த வணங்கான் படத்திலிருந்து சூர்யா சமீபத்தில் விலகினார்.

unknown node

Vanaangan [Image Source: Twitter ]

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா – பாலா இந்த படத்தின் மூலம் இணைந்ததால் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால், திடீரென படத்திலிருந்து சூர்யா விலகியது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. பல ரசிகர்கள் இன்னும் கூட சோகத்தில் இருக்கிறார்கள்.

இதையும் படியுங்களேன்-திருமணம் பற்றி சூசகமாக பதிவிட்ட சுனைனா.! அதிர்ச்சியில் கதறும் ரசிகர்கள்.!

unknown node

Suriya Aruva [Image Source: Twitter ]

அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த “அருவா” படம் நீண்ட நாட்களாக தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கான பணியை இயக்குனர் ஹரி மற்றும் சூர்யா தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம்.

unknown node

Suriya And Hari [Image Source: Twitter ]

முன்னதாகவே இந்த “அருவா” திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்குவதாகவும், படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பதாகவும், படத்திற்கு டி.இமான் இசையமைப்பதாவும் அறிவிக்கப்பட்டிருந்தது. பிறகு சில காரணங்களால் படம் ட்ராப் செய்யப்பட்டதாக தகவல்கள் பரவியது.இதனையடுத்து மீண்டும் இவர்களது கூட்டணி இணையவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இவர்களது கூட்டணியியில் வெளியான சிங்கம் 1 , சிங்கம் 2 ஆகிய படங்கள் பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.