பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்ததாக “மாமன்னன்” என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். பஹத் பாசில் மற்றும் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்திற்கான போஸ்டர் இன்று தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ளது.
போஸ்டரில், படத்தில் நடிக்கும் முக்கியமான நடிகர்களின் பெயருடன், எருமை கூட்டங்களுடன் காகங்கள் மற்றும் சங்கிலியால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான பாறையை போன்வை காட்சி படுத்தப்பட்டுள்ளது. இது கதையின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. மேலும் இதற்கான மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
unknown node