தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு வாத்தி அப்டேட்.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்...

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் "வாத்தி". இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “வாத்தி”. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை சம்யுக்த்தா நடித்து வருகிறார். படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

unknown node

இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில், படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த படம் உருவாகிறது.

unknown node

இந்த நிலையில் வரும் ஜூலை 28-ஆம் தேதி தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு 2 அப்டேட்டுகள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 27 -ஆம் தேதி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளது.

unknown node

மற்றொரு ட்ரீட்டாக ஜூலை 28-ஆம் தேதி தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு வாத்தி படத்தின் டீசரும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளார்கள்.

unknown node
தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு வாத்தி அப்டேட்.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்...