நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்து வருகிறார். சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பல நடிகர்கள் நடிகைகள் நடித்து வருகிறார்கள். முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் மிகவும் பிரமாண்டமாக இருப்பதால் ஒவ்வொரு காட்சிகள் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது.
unknown nodePushpa 2 [Image Source: Twitter ]
படத்திற்கான இசையமைக்கும் பணிகளும் தேவிஸ்ரீ பிரசாத் தீவீரமாக இறங்கி பணியாற்றி வருகிறார். இந்த இரண்டாவது பாகத்திலும் ஊ சொல்றியா மாமா பாடலை போல ஒரு குத்துப்பாடல் இருக்கிறதாம். முதல் பாகத்தில் சமந்தா அந்த பாடலில் கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார்.
unknown nodepushpa 2 o’solriya mama [Image Source: Twitter ]
எனவே அதைப்போலவே பாடல் மிகவும் அருமையாக இருக்கவேண்டும் என்று முன்னதாக பல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. குறிப்பாக மலைக்கா அரோரா, தமன்னா ஆகியோரிடம் அந்த பாடலில் நடனமாடுவவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதையும் படியுங்களேன்-இந்த காரணத்தால் தான் இன்னும் விஷாலுக்கு திருமணம் நடக்கலையா.? வெளியான ரகசிய தகவல்…
unknown nodePushpa 2 Kajal Agarwal [Image Source: Twitter ]
இறுதியில் தற்போது காஜல் அகர்வாலிடம் அந்த பாடலில் கவர்ச்சி நடனம் ஆடுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக புதிய தகவல் கசிந்துள்ளது. திருமணத்தை தொடர்ந்து சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த காஜல் அகர்வால் மீண்டும் நடிக்க வந்துவிட்டார்.
unknown nodeKajal Agarwal [Image Source: Twitter ]
தற்போது காஜல் அகர்வால் இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்தில் ஊ சொல்றியா மாமா பாடலை போல ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடவிருக்கிறாராம். காஜல் அகர்வால் கவர்ச்சி நடனம் நடனமாடவுள்ளதாக பரவும் தகவலால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.