அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தெலுங்கில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
unknown nodePushpa Part 2 [Image Source: Twitter]
முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் இன்னும் பிரமாண்டமாக இருக்கவேண்டும் என்பதால் ஒவ்வொரு காட்சியையும் படக்குழுவினர் பார்த்து பார்த்து எடுத்து வருகிறார்கள். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பஹத் பாசிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான இசையமைக்கும் பணிகளும் தேவிஸ்ரீ பிரசாத் தீவீரமாக இறங்கி பணியாற்றி வருகிறார்.
இதையும் படியுங்களேன்-அந்த ஒருநாளுக்கு பிறகு இனி இந்த பக்கமே வரக்கூடாதுனு முடிவு செஞ்சிட்டேன்.! மனதில் உள்ளதை பேசிய பிரியா.!
unknown nodePushpa Part 2 O Soltriya Mama [Image Source: Twitter]
மேலும், புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகத்தின் பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக படத்தில் இடம்பெற்றிருந்த “ஓ சொல்றியா மாமா ” பாடல் சிரியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது என்றே கூறலாம். இந்த பாடல் ஹிட்டானத்துக்கு மற்றோரு காரணம் என்னவென்றால், சமந்தா ஆடிய கவர்ச்சி நடனம் என்றும் கூறலாம்.
unknown nodePushpa Part 2 Tamannaah [Image Source: Twitter]
இதனையடுத்து, புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஒரு குத்து பாடல் இருக்கிறதாம். அந்த பாடலில் பிரபல நடிகையான தமன்னா கவர்ச்சி நடனம் ஆடவுள்ளாராம். இந்த தகவலை பார்த்த தமன்னா ரசிகர்கள் தற்போது மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.