சென்னை:இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் ‘விடாமுயற்சி’ திரைப்படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். சஸ்பென்ஸ் த்ரில்லர் நிறைந்த இப்படம் 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
படம் வெளிவர இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், கடைசி ஷெட்யூலுக்காக படக்குழு நேற்றைய தினம் பாங்காக் சென்றது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வந்த நிலையில், தனது பகுதிகளுக்கான டப்பிங் பணிகளை அஜீத் குமார் முழுவதுமாக முடித்துள்ளார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அஜித் மற்றும் த்ரிஷா ஆகியோருக்கான பாடல் ஷூட் ஆக இந்த பாங்காக் ஷெட்யூல் இருக்கும். இந்த பாடலுக்கு கல்யாண் மாஸ்டர் நடனம் அமைத்து வருவதாகவும், இந்த வார இறுதியில் முழவதும் முடிவடையும் என்றும் கூறப்படுகிறது.
இதனை உறுதி செய்யும் வகையில், சமூக வலைத்தளங்களில் அஜித் மற்றும் த்ரிஷா ஆகியோரின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. அதாவது நடிகர் அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா, தனது எக்ஸ் பக்கத்தில் அப்டேட் ஒன்று வெளியாகிறது என சொல்லியும் சொல்லாமல் 5.32 என்று நேரத்தைகுறிப்பிட்டு இருந்தார்.
இதனை பார்த்த ஆஜித்தின் ரசிகர்கள் ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் சிங்கிளாக இருக்கும் என கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். பின்னர், சுரேஷ் சந்திரா குறித்த நேரத்தில் அப்டேட்டையும் வெளியிட்டார், ஆனால் அந்த அப்டேட் என்னவென்றால், படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் சென்று கொண்டிருப்பதாக சில புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்திருக்கிறார்.
unknown nodeஇந்த புகைப்படங்களில், ஒரு பக்கம் நடிகர் அஜித் தனக்கு ஃபேவரைட்டான கோட் சூட்டில் ஸ்டன்னிங்க் லுக்கில் காட்சியளித்தார். மறுபக்கம், நடிகை திரிஷா சேலையில் தோன்றி ரசிகர்களை கிறங்கடித்தார். மேலும், ஒரு புகைப்படத்தில் இருவரும் கைகோர்த்துக் கொண்டு செல்லும் புகைப்படம் திருமண பாடலுக்கான காட்சியை உறுதி செய்துள்ளது.
unknown node