“உன்னை கொலை செய்துவிடுவேன் , எனக்கு குண்டு வீசவும் தெரியும் , கத்தி வீசவும் தெரியும்” என கூறி மிரட்டியுள்ளார்.அந்த வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா.இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. ஆந்திராவில் ஏப்ரல் 11-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனால் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏவாக இருக்கும் நடிகர் பாலகிருஷ்ணா ஹிந்துபுர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது பத்திரிகையாளர்கள் சிலர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். அப்போது கோபமான அவர் பத்திரிகையாளர் கன்னத்தில் அறைந்துள்ளார்.
மேலும் “உன்னை கொலை செய்துவிடுவேன் , எனக்கு குண்டு வீசவும் தெரியும் , கத்தி வீசவும் தெரியும்” என கூறி மிரட்டியுள்ளார்.அந்த வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
https://twitter.com/rahulscribe/status/1110890068468736001