முடிவுக்கு வரும் பிரபல சீரியல்? கார்த்திக்கு ஜோடியாக போகும் அந்த சின்னத்திரை நடிகை…

கடந்த இரண்டு வருடங்களாக பிளாக்பஸ்டர் படங்களை வழங்கி வந்த நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக ராஜு முருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜப்பான்’ படத்தின் தோல்வியால் சற்று அப்செட்டில் இருக்கும் நிலையில், அவரது வரவிருக்கும் படங்கள் பற்றிய தகவல் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகிறது.
கார்த்தி தற்பொழுது, தனது 26 வது படத்தில் நடித்து வரும் நிலையில், மறுபக்கம் கார்த்தியின் 27வது படத்தை படத்தை பிரேம்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கும்பகோணம் பகுதியில் தொடங்கியது.
சூர்யாவின் தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்தில் அரவிந்த் சுவாமியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
இந்த திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான சில தகவல்கள் வெளியாகி வருவதால், படத்தில் கதாநாயகியாக யார் நடிக்கிறார் என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில், இப்படத்தில் ஹீரோயின் கதாபாத்திரம் கிடையாது என்ற தகவல் வெளியானது. ஆனால், தற்பொழுது பிரபல தமிழ் சீரியல் நடிகை நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஜோடி இல்லாமல் நடிக்கும் கார்த்தி…புதிய படத்தின் தலைப்பு இதுதான்!
கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமிக்கு இடையேயான நட்பை மையமாக வைத்து தான் இப்படத்தின் கதை இருக்கும் கூறப்பட்ட நிலையில், பிரபல தொலைக்காட்சி தொடரான ‘ஈரமான ரோஜாவே 2’ சீரியலில் பிரியா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஸ்வாதி கொண்டே, தற்போது காரைக்குடி பகுதியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
விருப்பமே இல்லை பணத்துக்காக அதையெல்லாம் ஒப்புக்கொண்டேன்! தமன்னா காதலர் வேதனை!
இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில், நடிகை சுவாதி இன்ஸ்டா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ‘விரைவில் ஏதோ முடியப்போகிறதா’என்று பதிவிட்டிருந்தார். இதனால் இந்த சீரியல் முடிய போகிறதா? அல்லது சீரியலை விட்டு சுவாதி விலக போகிறாரா? என்ற குழப்பம் ரசிர்கர்களுக்கு இருந்த நிலையில், இந்த படத்தில் நடிப்பதற்காக தான் அவ்வாறு பதிவிட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ‘கார்த்தி 27’ படத்தில் அவரது கதாபாத்திரம் என்னவென்று விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கன்னடப் படங்களில் நடிகையாக அறிமுகமான ஸ்வாதி கொண்டே, பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமாகினார் என்பது குறிப்பிடத்தக்க்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
AFG vs ENG: கடைசி வரை போராடிய இங்கிலாந்து… கடைசியில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்
February 26, 2025
ஈஷாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! காலை 6 மணி வரை தியானம்!
February 26, 2025
மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
February 26, 2025