தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “லவ் டூடே”. இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை கண்டது.
unknown nodeஇந்த நிலையில், லவ் டூடே என்ற அதே தலைப்பில் தற்போது ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது. அந்த படத்தை ஜெயம் ரவியை வைத்து கோமாளி என்ற வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி அவரே இந்த படத்தில் நடிக்கிறார்.
unknown nodeபடத்தை விஜயின் பிகில் படத்தை தயாரித்த எஜிஎஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். “லவ் டூடே” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடபட்டுள்ளது.
unknown nodeஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான லவ் டூடே படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்த படத்திற்கும் அதே தலைப்பு வைக்கப்பட்டுள்ளதால், படம் தோல்வியடைந்தால், விஜயின் படத்தை வைத்து விமர்சனம் செய்வார்கள் என்று விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.
unknown node