"அத்தான் அத்தான்".. அழகாக வெளியான கார்த்தியின் 'மெய்யழகன்' டீசர்.!

கார்த்தி, அரவிந்த் சாமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் 'மெய்யழகன்' படத்தின் டீசர் வெளியானது.

Meiyazhagan Teaser

சென்னை :இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள “மெய்யழகன்” படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது. டீசர் பார்ப்பதற்கே ஒரு பீல் குட் படம் போல் தெரிகிறது.

கிராமத்து பாணியில் அமைந்திருக்கும் இந்த படத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி ஆகியோர் உறவினராக நடித்துள்ளனர். அரவிந்த் சாமியை “அத்தான் அத்தான்” என்று கார்த்தி அழைக்கிறார். அதில், அரவிந்த் சாமி வெளிவூர் சென்று சிட்டி காரனாக நடிக்க, கார்த்தி ஒன்னும் தெரியாத இன்னசன்டாக நடித்திருக்கிறார்.

unknown node

படம் செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. ப்ரோமோஷனின் ஒரு பகுதியாக சமீபத்தில், இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. இந்த படத்தை கார்த்தியின் சகோதரரும் நடிகருமான சூர்யா, அவரது மனைவியும் நடிகையுமான ஜோதிகாவுடன் இணைந்து தயாரித்துள்ளார்.

படத்தில், சரண் சக்தி மற்றும் ராஜ்கிரண் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் ஸ்ரீ திவ்யா கதாநாயகியாக நடிக்கிறார். அவர்களை தவிர, நடிகர்கள் தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், ஸ்ரீ ரஞ்சனி, இளவரசு, கருணாகரன், சரண், ரேச்சல் ரெபேக்கா, அந்தோணி, ராஜ்குமார், இந்துமதி, ராணி சம்யுக்தா, கயல் சுப்ரமணி, அசோக் பாண்டியன் ஆகியோர் நடித்துள்ளனர்.

கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இந்த படத்துக்கு மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஆர் கோவிந்தராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

"அத்தான் அத்தான்".. அழகாக வெளியான கார்த்தியின் 'மெய்யழகன்' டீசர்.!