உங்க பஞ்ச் டயலாக்கிற்கு கதை ரெடி.! தனுஷை வச்சு செய்த நயன்தாரா.!
நான் வைத்த இந்த குற்றச்சாட்டுகளை, பொய்யாக திரித்து, ஒரு கதையை உருவாக்கி அடுத்த இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேச வாய்ப்புள்ளதாக நயன்தாரா கூறியுள்ளார்.

சென்னை : நயன்தார விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த திருமண வீடியோவில் நானும் ரவுடி தான் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் பயன்படுத்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அனுமதி தரவில்லை என்பதால் அவர் மீது குற்றச்சாட்டை முன் வைத்து நயன்தாரா பேசியிருப்பது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நயன்தார – விக்னேஷ் சிவன் திருமண வீடியோவிற்கான டிரைலரும் வெளியிடப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் நானும் ரவுடிதான் படத்தின் இசை பயன்படுத்த பட்டுள்ளது. அதனைப்பார்த்த தனுஷ் தங்களுக்கு Legal Notice அனுப்பியதாகவும், தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட, ஏற்கனவே இணையதளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு ரூ. 10,00,00,000 (பத்து கோடி) நஷ்ட ஈடு கேட்டதாகவும், இது கீழ்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது” என கூறியுள்ளார்.
மேலும், குற்றச்சாட்டை முன் வைத்து நயன்தாரா வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தனுஷை வெளிப்படையாகவே அவர் விமர்சித்து பேசி இருக்கிறார். அதில் குறிப்பாக, தனுஷ் எப்போதும் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது என்றால் “எண்ணம் போல் வாழ்கை”…அன்பை பகிர்வோம் என்பது போல பேசி ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுப்பார்.
அப்படி பேசும் தனுஷ் மேடையில் மட்டும் அப்படி பேச்சுக்கொண்டு முகமூடி அணிந்து வேஷம் போடுவதாகவும் நயன்தாரா கூறியுள்ளார். அடுத்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் இதனை மறைத்து பேசுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதில் “அடுத்த இசை வெளியீட்டு விழாவில், இது எதுவுமே நடக்கவில்லை என மறுத்து கற்பனையாக சில கதைகளை புனைந்து, அதனையே உண்மையைப் போல் நீங்கள் சொல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், அதனை கடவுள் பார்த்துக் கொண்டிருப்பார் என்பதை மறந்து விடாதீர்கள். மேடைகளில் உங்கள் அப்பாவி ரசிகர்கள் முன் பேசுவைதப் போல், ஒரு சதவீதம் கூட உங்களால் நடந்துகொள்ள முடியாது ” என நயன்தாரா கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
AUSvENG : முடிஞ்சா தொட்டுப்பார்.! வெளுத்து வாங்கிய பென் டக்கெட்! ஆஸி.க்கு இமாலய இலக்கு!
February 22, 2025
காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!
February 22, 2025
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025