சென்னை :இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய ‘தி கோட்’ (GOAT) படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து, விஜய் அரசியலுக்கு வரும் முன் தனது இறுதிப் படத்தில் நடிக்க உள்ளார்.
அந்த படத்துக்கு “தளபதி 69” என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ளது, படம் பற்றிய கூடுதல் விவரங்கள் இன்று (செப்டம்பர் 14) மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தற்பொழுது அறிவிப்பும் வெளியாகியுள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள இந்த படத்தின் பெயர் தெரிவிக்கப்படவில்லை. அத்துடன், தீப்பந்தத்தை ஏந்தி நிற்கும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
unknown nodeமேலும், இப்படம் அடுத்த ஆண்டு அக்டோபரில் வெளியாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. போஸ்டரில், “THE TORCH BEARER OF DEMOCRACY. ARRIVING SOON” என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு “ஜனநாயகத்தின் தீபம்..” அர்த்தமாகும் .
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், எடிட்டராக பிரதீப் ராகவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த திரைப்படம் ஒரு அரசியல் கலந்த கதையாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
போஸ்டரை வைத்த பார்க்கையில், விஜய்யின் கையில் ஓங்கிய தீ பந்தம்… படத்தில் விஜய்யின் அரசியல் ஒலிக்குமா? வினோத் அதனை எவ்வாறு செய்ய போகிறார் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.
இதனிடையே, படத்தில் சிம்ரன், மலையாள இளம் நடிகை மமிதா பைஜு ஆகியோர் நாயகிகளாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் மோகன்லாலையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக மலையாள இணைய தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே ஜில்லா படத்தில் விஜய் தந்தையாக மோகன்லால் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சதுரங்க வேட்டை (2014), தீரன் அதிகாரம் ஒன்று (2017), மற்றும் நேர்கொண்ட பார்வை (2019) ஆகிய படங்களின் மூலம் பிரபலமான எச் வினோத், கடைசியாக நடிகர் அஜித்தை வைத்து துணிவு (2023) படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கத .
