கொடூர லுக்கில் சிம்பு...அனல் பறக்க வெளியான 'STR 48' ஃபர்ஸ்ட் லுக்!

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'STR48' படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகுமென படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, நாளை

STR48 poster

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘STR48’ படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகுமென படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, நாளை சிம்புவின் பிறந்தநாள் என்பதால், அதனை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

போஸ்டரில் நடிகர் சிம்பு இரட்டை வேடத்தில் இருப்பதை காட்டுகிறது. முன்பே வெளியான தகவலை போல் படத்தில் சிம்பு இரட்டை நடித்திருக்கிறார். போஸ்டர் சும்மா வெறித்தனமாக இருக்கிறது.

unknown node

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாக ஏற்கனவே படத்தின் இயக்குனரான தேசிங் பெரியசாமி பல பேட்டிகளிலும் கூறியிருந்தார்.

சர்ச்சை கருத்து நான் சொல்லவில்ல….இருந்தாலும் தமிழ்‌ மக்களிடம்‌ மன்னிப்புக் கேட்கிறேன் -தன்யா பாலகிருஷ்ணா

அதே வேலையில், சிம்பு ரசிகர்கள் அனைவரும் இந்த திரைப்படத்தினை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள். படமும் நன்றாக வர வேண்டும் என்று பட குழுவும் தீவிரமாக வேலை செய்து வருகிறது. அந்த வகையில், இந்த திரைப்படத்திற்காக நடிகர் சிம்புவும் நீளமான தலைமுடியுடன் இருக்கிறார்.

அதுபோல், இப்படத்திற்காக உடல் எடையை குறைத்து, சிம்பு ஸ்லிம்மாக மாறியுள்ளார். எனவே படம் எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.