உண்மை சம்பவத்தில் எடுக்கப்போகும் புது படம்...போலீசாக மிரட்ட வருகிறார் தனுஷ்.?!

நடிகர் தனுஷ் தற்போது நடித்துமுடித்துள்ள வாத்தி திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க அனைவரும் ஆவலுடன்

நடிகர் தனுஷ் தற்போது நடித்துமுடித்துள்ள வாத்தி திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.  இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தாக நடிகர் தனுஷ் அருண் மாதேஷ் வரன் இயக்கத்தில் உருவாகி வரும் “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகிறார்.

unknown node

Captain Miller [Image Source: Twitter ]

இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு அடுத்ததாக, நடிகர் தனுஷ் பிரபல இயக்குனரான எச்.வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படத்தில் நடிக்கவுள்ளாராம். அந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

இதையும் படியுங்களேன்-அந்த விஷயம் ரொம்ப ரொம்ப முக்கியம்…நடிகை நிதி அகர்வால் ஓபன் டாக்.!

unknown node

H Vinoth And Dhanush [Image Source: Twitter ]

இந்த திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட தான் இயக்கும் அடுத்த படம் ஒரு உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்படவுள்ளதாகவும், போலீஸ் அதிகாரி ஒருவர் தன்னிடம் கூறிய கதை என்றும் தெரிவித்திருந்தார்.

unknown node

Dhanush And HVinoth [Image Source : Google]

எனவே அந்த உண்மை சம்பவ கதையை தான் இயக்குனர் எச்.வினோத் படமாக இயக்கவுள்ளாராம். மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். எந்த கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதனை அருமையாக நடித்துக்கொடுக்க கூடிய தனுஷ், இந்த படத்தில் போலீசாக நடிக்கவுள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகாமாகியுள்ளது.