கலைகள் மூலமாக தான் திராவிட இயக்க வரலாறு வெற்றி பெற்றது : பா.ரஞ்சித்

பா.ரஞ்சித் தமிழ் சினிமாவின் பிரபலமான திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தமிழில் அட்டகத்தி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர்

பா.ரஞ்சித் தமிழ் சினிமாவின் பிரபலமான திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தமிழில் அட்டகத்தி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தின் காலா படத்தையும் இயக்கியுள்ளார்.இந்நிலையில், இயக்குனர் ரஞ்சித் அவர்கள், தமிழகத்தில் கலைஞர்கள் பேசுவதற்கு வாய்ப்பு இல்லாத சூழல் நிலவுவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், கலையை தமிழக அரசு எந்த அளவிற்கு ஊக்குவிக்கின்றது என கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், கலைகள் மூலம் தான் திராவிட இயக்க வரலாறு வெற்றி பெற்றது என்பதை திராவிடக்கட்சிகள் மறந்துவிடக் கூடாது எனக் கூறியுள்ளார்.