முதல் படமே காதல்.. "சத்தம் போடாம கத்து" அதர்வா தம்பி – அதிதியின் 'நேசிப்பாயா' டீசர்.!

இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் மறைந்த நடிகர் முரளி மகன் ஆகாஷ், அதிதி நடிக்கும் 'நேசிப்பாயா' படத்தின் டீசர் வெளியானது.

Nesippaya Teaser

சென்னை :இயக்குனர் விஷ்ணு வர்தனின் 10வது படமான நேசிப்பாயா திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் மூலம் மறைந்த நடிகர் முரளியின் மகனும் அதர்வாவின் சகோதரருமான ஆகாஷ் முரளி கதநாயகனாக அறிமுகமாகிறார்.

மேலும், அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கரும் நடிக்கிறார். ஆகாஷ் முரளிக்கு முதல் படமே காதல் படமாக அமைந்துள்ளது. டீஸர் ஆகாஷுக்கும் அதிதிக்கும் இடையே ஒரு காதல் காட்சியைக் காட்டுகிறது.

unknown node

கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இருவரும் காதலிப்பதாக தெரிகிறது. இருப்பினும், ஒரு கட்டத்தில் பிரிந்து செல்கின்றனர். இறுதில் இருவரும் ஒன்னு சேர்ந்தார்களா இல்லையா என்பதே படத்தின் கதைக்களம்.

இந்த படத்தில் கூடுதலாக, சரத் குமார், பிரபு, குஷ்பூ சுந்தர் மற்றும் ஷிவ் பண்டிட் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் தயாரிப்பாளர்களால் அறிவிக்கப்படவில்லை.

விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்த XB ஃபிலிம் கிரியேட்டர்ஸின் சேவியர் பிரிட்டோ இந்த படத்தை தயாரித்துள்ளார். படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

முதல் படமே காதல்.. "சத்தம் போடாம கத்து" அதர்வா தம்பி – அதிதியின் 'நேசிப்பாயா' டீசர்.!