பொள்ளாச்சி சம்பவம் குறித்து கொதித்தெழுந்த பிரபல நடிகை….!!!
- பொள்ளாச்சி சம்பவம் குறித்து கொதித்தெழுந்த நடிகை வரலக்ஷ்மி.
- அமைதியாக இருந்தால் ஒருநாள் அவர்களது வீட்டிலேயே இப்படிப்பட்ட சம்பவம் நடக்கும்.
கடந்த சில நாட்களாகவே இந்தியாவையே கொந்தளிக்க வைத்த ஒரு சம்பவம் பொள்ளாச்சி விவகாரம். 7 ஆண்டுகளாக பல பெண்களை வைத்து, பாலியல் வன்முறையில் ஈடுபட்ட சில கொடூரர்களின் வெறிச்செயல் இன்று வெளியரங்கமாகியுள்ளது.
இதனையடுத்து, பல தரப்பினரும் இதற்க்கு குரல் கொடுத்து வருகின்றார். இந்நிலையில், நடிகை வரலக்ஷ்மி இது குறித்து கூறுகையில், பொள்ளாச்சி விவகாரம் குறித்து பெரிய நடிகர்கள் ஒன்றும் கூறவில்லை.
மேலும், அவர்கள் கேள்வி எழுப்பினால் மக்களுக்கு அது எவ்வளவு நல்லதாக அமையும்.. எல்லா நடிகர்களால் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்றும், அமைதியாக இருந்தால் ஒருநாள் அவர்களது வீட்டிலேயே இப்படிப்பட்ட சம்பவம் நடக்கும் என்று மிகவும் கோபத்துடன் தெரிவித்துள்ளார்.,