"500 படங்கள் நடித்த பிரபல நடிகர் மரணம்" சோகத்தில் திரையுலகம்..!!

குணச்சித்திர கதாபாத்திரம் வில்லன் என பல தோற்றங்களில் நடித்த 68 வயதான மலையாள நடிகர் கேப்டன் ராஜு இன்று காலை உயிரிழந்தார்.

குணச்சித்திர கதாபாத்திரம் வில்லன் என பல தோற்றங்களில் நடித்த 68 வயதான மலையாள நடிகர் கேப்டன் ராஜு இன்று காலை உயிரிழந்தார்.

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் கேப்டன் ராஜு. குணச்சித்திரம், வில்லன் கதாபாத்திரம் என தனிப்பட்ட நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தார் இவர். தமிழில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு, ஜல்லிக்கட்டு, ஜீவா, தாய்நாடு, சூரசம்ஹாரம், தர்மத்தின் தலைவன் போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளார். 1950-ல் பிறந்த இவர் முதலில் இந்திய ராணுவத்தில் பணியாற்றினார்.பிறகு 37 ஆண்டுகள் சினிமா துறையில் பணியாற்றினார். திரைப்படங்கள் மற்றும் டி.வி சீரியல், விளம்பரங்கள் போன்றவற்றிலும் நடித்துள்ளார்.இவரின் இறப்பால் திரையுலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

DINASUVADU

"500 படங்கள் நடித்த பிரபல நடிகர் மரணம்" சோகத்தில் திரையுலகம்..!!