காமெடி நடிகரான ஜெயச்சந்திரன் தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார். 66 வயதாகும் ஜெயச்சந்திரனுக்கு சர்க்கரை நோயால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு படப்பிடிப்புக்குச் சென்று வீடு திரும்பிய ஜெயச்சந்திரன் மறுநாள் காலை பாத்ரூமுக்குச் சென்ற போது நிலை தடுமாறி வழுக்கி விழுந்துள்ளார்.இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டு மயக்கமடைந்துள்ளார்,உடனே அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. ஜெயச்சந்திரனுக்கு லட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார்கள்.
unknown nodeநடிகர் சங்கம் சார்பில் நடிகர் விஷால், பொன்வண்ணன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இதனை அடுத்து வடிவேலுவுடன் நடித்த காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சமீபத்தில் ஷூட்டிங்கில் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில், தற்போது மேலும் ஒரு நடிகர் மரணமடைந்தது இதனை கண்டு திரைத்துறையினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது .
unknown node