முதல் நாள் வசூலில் "2.0" திரைப்படத்தை பின்னுக்கு தள்ளிய அவெஞ்சர்ஸ் !இத்தனை கோடியா வசூல் செய்தது

This news gives information about The Avengers pushed the movie "2.0" back to the first day collection!

மார்வெல் பட தயாரிப்பில்  22-வது திரைப்படமான “அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்” நேற்று இந்தியா முழுவதும் வெளியாகியுள்ளது. மார்வெல் தயாரிப்பில் இப்படம் தான் கடைசி படம் என கூறப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று உள்ளது.

இப்படம் இந்தியா முழுவதும் முதல் நாளில் மட்டும் ரூபாய் 63.21 கோடியை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்பட வசூல் தான் இந்திய அளவில் முதல் நாள் வசூலில் முதலிடத்தை பிடித்து உள்ளது.

இதற்கு முன் முதல் நாள் வசூலில் “2.0” திரைப்படம் 51 கோடி வசூலிலும் , கடந்த வருடம் வெளியான “தக்ஸ் ஆப் இந்துஸ்தான்” திரைப்படம்  52.25 கோடி வசூலிலும்  இருந்தது.

இந்நிலையில் “தக்ஸ் ஆப் இந்துஸ்தான்”  திரைப்படத்தை இரண்டாம் இடத்திற்கு அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம்  தள்ளி உள்ளது.

முதல் நாள் வசூலில் "2.0" திரைப்படத்தை பின்னுக்கு தள்ளிய அவெஞ்சர்ஸ் !இத்தனை கோடியா வசூல் செய்தது