ஆக்ஷன் வேற‌ லெவலில் இருக்கும்.!வலிமை அப்டேட்டை கொடுத்த பிரபல நடிகர்.!

Actor RK Suresh has said that the action scenes in Valimai will be on a different level.

வலிமை படத்தில் ஆக்ஷன் காட்சிகள் வேற லெவலில் இருக்கும் என்று நடிகர் ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

டைட்டிலை தவிர இதுவரை வலிமை படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை .இதனால் தல ரசிகர்கள் அப்டேட் எப்போது என்று கேட்டு வருகின்றனர்.விரைவில் வலிமை அப்டேட் வெளிவரும் என்று காத்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி வெளியாகியுள்ளது.இந்த நிலையில் பிரபல நடிகரும் , தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் வலிமை படத்தின் ஒளிப்பதிவாளரான நீரவ்ஷாவை சந்தித்துள்ளார்.

அவரிடம் சுரேஷ் வலிமை அப்டேட் கேட்க வலிமை படத்தின் ஆக்ஷன் காட்சிகள் வேற லெவலில் இருக்கும் என்று ஒளிப்பதிவாளர் கூறியதாக தெரிகிறது.அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் நீரவ்ஷாவுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார்.இந்த தகவலால் தல ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

unknown node