நன்றி மறந்தவர் விக்னேஷ் சிவன்! கடுமையாக விமர்சிக்கும் ரசிகர்கள்!

— Vignesh Shivan (@VigneshShivN) October 21, 2019

இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் அவர். இவர் சிம்பு மற்றும் வரலெட்சுமி நடிப்பில் உருவான போடாபோடி படத்தில் நடித்ததன் மூலம் இயக்குனராக  அறிமுகமானார். ஆனால், இந்த படம் தோல்வி படமாக அமைந்தது.இந்நிலையில், இப்படத்திற்கு பின் 3 வருடங்கள் கழித்து, நடிகர் தனுஷ் நானும் ரௌடி தான் படத்தை இயக்கும் வாய்ப்பினை விக்னேஷ் சிவனுக்கு கொடுத்துள்ளார். இப்படம் வெற்றியை பெற்ற நிலையில், படம் முடிவதற்குள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதனையடுத்து, இப்படம் வெளியாகி 4 வருடங்கள் ஆன நிலையில், அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விக்னேஷ் சிவன் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், விஜய் சேதுபதி, ஆர்ஜே பாலாஜி, அனிருத், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ், டான்ஸ் மாஸ்டர் சதீஸ், சண்டை பயிற்சியாளர் தினேஷ் படத்தை வெளியிட்ட லைக்கா ஆகியோரை டேக் செய்துள்ளார்.இந்த பதிவில், இப்படத்தினை இயக்கும் வாய்ப்பினை கொடுத்த நடிகர் தனுஷை டேக் செய்யவில்லை. இதனால் கொதித்தெழுந்த தனுஷ் ரசிகர், நன்றி மறைந்தவர் விக்னேஷ் சிவன் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

unknown node