டெல்லி பெண்ணாக இருந்த என்னை தெலுங்கு பெண்ணாக ஏற்றுக் கொண்ட ரசிகர்களுக்கு நன்றி – ராகுல் ப்ரீத் சிங்!

Today Thanks to the fans marks the 7th anniversary of the release of Rahul Preet Singh's hit film in Telugu.

இன்று தெலுங்கில் ராகுல் பிரீத் சிங் அவர்களின் வெற்றி படம் வெளியாகி 7 வருடமாகிய நிலையில் டெல்லி பெண்ணாக இருந்த தன்னை தெலுங்கு பெண்ணாக ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு திரை உலகில் முன்னணி கதாநாயகியாக தற்பொழுது வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ராகுல் ப்ரீத் சிங். டெல்லியில் பிறந்து வளர்ந்த இவர் தமிழிலும் பல படங்கள் நடித்துள்ளார். தடையர தக்க, புத்தகம் என்னமோ என சில படங்களில் நடித்துள்ளார். நிலையில் தெலுங்கில் இவர் வெங்கடாத்ரி என்னும் படத்திற்கு பின்பு தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் இன்று அந்த படம் வெளியாகி ஏழு வருடம் ஆகும் நிலையில் இது குறித்து தனது இணையதள பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஏழு வருடங்களாக திரையுலகில் எனது வாழ்க்கை என பதிவிட்டு ஒரு டெல்லி பெண்ணாக இருந்த என்னை பக்கா தெலுங்கு பெண்ணாக பாசத்துடன் ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.